Ethirneechal: மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும் ஈஸ்வரி... உயிரைப் பறிக்க காத்திருக்கும் கும்பல்
எதிர்நீச்சல் சீரியலில் கடை திறப்பு விழாவிற்கு மருமகள்கள் தீவிரமாக வேலை செய்துவரும் நிலையில், இத்தருணத்தில் ஈஸ்வரியும் மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு வர இருக்கின்றார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகிவரும் எதிர்நீச்சல் சீரியல் தற்போது மிகவும் சுவாரசியமாக செல்கின்றது. வீட்டு பெண்களை அடக்கி ஆண்ட குணசேகரன் தற்போது தலைமறைவாகி வருகின்றார்.
மருமகள்களுக்கு முழு ஆதரவை தெரிவித்துவரும் விசாலாட்சியுடன் தற்போது அப்பத்தாவும் சேர்ந்துள்ளார். குணசேகரனின் சதி திட்டத்தை முறியடித்து வீட்டு மருமகள்களை மீண்டும் வீட்டிற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

இந்நிலையில் தங்களது உணவகத்தினை தொடங்குவதற்கு தீவிர முயற்சி செய்து வரும் நிலையில், ஈஸ்வரியும் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப உள்ளார்.
வீட்டிற்குள் இருந்து கொண்டு சகுனி வேலை செய்யும் அறிவுக்கரசி ஒருவரை போட்டுத்தள்ளுவதற்கு கதிரிடம் பேசியுள்ளார். வெறித்தனமாக இருக்கும் அறிவுக்கரசியினால் ஒரு உயிர் பறிபோகுமா? என்ற கேள்வியும் எழுகின்றது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |