தினமும் காலையில் பழைய சோறு சாப்பிட்டு பாருங்க... ஏகப்பட்ட நன்மையினை பெறுவீங்க
காலை நேரத்தில் பழைய சோறு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையினைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பழைய சாதம்
நமது உடம்பிற்கு தேவையான சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவுகளிலிருந்து கிடைக்கின்றது. ஆனால் அந்த சத்துக்களை சேமித்து வைப்பதற்கு குடலின் ஆரோக்கியம் மிக முக்கியம் ஆகும்.
ஆம் ஆரோக்கியத்தினை சேமித்து வைக்க குடல் முக்கிய பங்கு வகிக்கின்றது. குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்கள் தான் இதற்கு காரணம். இவை செரிமானத்தை மேம்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அளிக்கின்றது.
தினமும் காலையில் நாம் பழைய சாதத்தினை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது என்னென்ன நன்மையினைப் பெறலாம் என்பதை தெரிந்து கொள்வோம்.

நன்மைகள் என்ன?
நமது உடலுக்கு தேவையான நார்ச்சத்தின் அளவு குறையும் நேரத்தில், தீங்கு விளைவிக்கும் மற்றொரு பாக்டீரியாக்கள் நுழையும் போதோ குடலில் இரு்ககும் நல்ல பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுகின்றது.
நல்ல பாக்டீரியாக்களை பழைய சாதத்திலிருந்து நாம் பெற்றுக் கொள்ளலாம். இரவு முழுவதும் சாதத்தினை தண்ணீரில் ஊற வைக்கும் போது நன்மை அளிக்கும் பாக்டீரியாக்கள் உருவாகி புரோபயாட்டிக் உணவாக மாறிவிடுகின்றது.

இவை குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதுடன், உடலின் வெப்பநிலையைக் குறைக்கவும் செய்கின்றது. மேலும் கோடை காலங்களில் உடம்பை குளிர்ச்சியாக வைத்திருக்கவும் உதவுகின்றது.
நாள் முழுவதும் ஆற்றலை கொடுப்பதுடன், சோர்வை நீக்கி சுறுசுறுப்பையும் கொடுக்கின்றது. புத்துணர்ச்சியாக வைக்கவும் செய்கின்றது.
எளிய முறையில் செலவு இல்லாமல் கிடைக்கும் பழைய சோறை அவ்வளவாக யாரும் விரும்புவதில்லை. ஆகவே பழைய சோறு காலையில் சாப்பிடுவதற்கு மிகச்சிறந்த பாரம்பரிய உணவாக பார்க்கப்படுகின்றது.

தமிழர்களின் உணவுப்பழக்கங்களில் ஒன்றாக காணப்படும் பழைய சோற்றை எவ்வாறு தயாரிக்க வேண்டும் என்ற கேள்வியும் சிலருக்கு எழுந்திருக்கும்.
நாம் பகலில் சமைக்கும் சோறு மீதமாக இருக்கும் போது அதனை குளிர்சாதனப்பெட்டியில் சேமிக்காமல், அதில் தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் வெளியில் வைத்துவிடவும்.
இரவு முழுவதும் தண்ணீரில் ஊற வைத்த சாதம் தான் காலையில் சத்தான பழைய சோறாக மாறிவிடுகின்றது. பழைய சாதம் சாப்பிடுவதும் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்தது என்று ஆய்வுகளும் தெரிவிக்கின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |