தலைமுடியை இடுப்பு வரை நீளமாக்கும் நெல்லிக்காய்!
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு எழும் பிரச்சினைகளால் அவர்களுக்கு ஏற்படும் இழப்புகளில் தலைமுடியும் ஒன்று.
தலைமுடி உதிர்வு ஆரோக்கியம் குறைப்பாடு, அதிகமான சிந்தனை, மன உளைச்சல் ஆகிய பிரச்சினைகளால் ஏற்படுகின்றது.
இந்த பிரச்சினையை ஆரம்பத்தில் பார்க்காவிட்டால் காலப்போக்கில் அது வேறு வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.
ஆனால் இதற்கு ஒரு தீர்வு இருக்கின்றது என மருந்துவர்கள் சிபாரிசு செய்யும் ஒரே ஒரு கனி நெல்லிக்காய் தான்.
இந்த கனியை எடுத்து கொள்வதால் தலைமுடி ஊட்டம் பெற்று தளதளவென தலைமுடி வளர்த்து விடுகின்றது.
இத்தனை சிறப்புக்கள் கொண்ட நெல்லிக்காயை எவ்வாறு தலைக்கு பயன்படுகின்றது என தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
எப்படி நெல்லிகாயை பயன்படுத்துவது?
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் தூள் - 1 மேசைக்கரண்டி
- புளிப்பு தயிர் - 1 மேசைக்கரண்டி
- ஆர்கன் எண்ணெய் - தேவையானளவு
செய்முறை
மேற்குறிப்பிட்ட பொருட்களை ஒரு பவுலில் போட்டு கலந்து கொள்ளுங்கள். தலையில் கொஞ்சம் அடர்த்தியான தலைமுடி இருந்தால் அளவுகளை மாற்றலாம்.
குளிப்பதற்கு அரை மணி முன்னர் தலைக்கு தடவி விட்டு பின்னர் ஷாம்பூவைப் பயன்படுத்தி முடியை அலச வேண்டும்.
1. முடி உதிர்வு
நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிடுவதால் கால்சியம் சத்து அதிகரிக்கின்றது. இதனால் தலைமுடிக்கு கெரட்டின் கிடைக்கின்றது. தலைமுடி உதிர்வு தடைப்பட்டு பளபளப்பாக வளர ஆரம்பிக்கும். முடி உடைவும் இருக்காது.
2. முடி வளர்ச்சி
தலைமுடி வளர்ச்சியை துண்டுவதில் நெல்லிக்காயிற்கு முக்கிய பங்கு இருக்கின்றது. அத்துடன் 5 ஆம்லாவில் உள்ள ஆல்பா ரிடக்டேஸ் அனாஜென் முடியின் வேர்களை ஊக்குவிக்கிறது மற்றும் செழிப்பான முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது.
3. பொடுகு பிரச்சினை
நெல்லிக்காய் கலந்த மருத்துவ பொருட்கள் தலைக்கு பயன்படுத்தலாம். இவ்வாறு பயன்படுத்துவதால் தலையில் இருக்கும் பொடுகுகள் தானாக மறைந்து விடுகின்றன.
அத்துடன் நெல்லிக்காயில் இருக்கும் கால்சியம் சத்து தலையில் பொடுகு வராமல் பாதுகாக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |