ட்ரெண்டிங் லுக்கில் ரசிகர்களை கிறங்கடிக்கும் வனிதா மகள் ஜோவிகா! வைரல் புகைப்படங்கள்
நடிகை வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா ட்ரெண்டிங் உடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
வனிதா
தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான “சந்திரலேகா” படத்தில் மூலம் என்றி கொடுத்தவர் தான் வனிதா விஜயகுமார்.
இதனை தொடர்ந்து பெரியளவு படங்களில் நடிக்காமல் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகி விட்டார். நீண்ட நாட்களுக்கு பின்னர் அவரை விவாகரத்து செய்து விட்டு 3 திருமணங்கள் செய்து விட்டு சர்ச்சையாக நாயகியாகவே மாறி விட்டார்.
சினிமா பிரேக் கொடுத்து விட்டு, சீரியல், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என பிஸியாக இருந்த வனிதா விஜயகுமார் தற்போது இவரே இயக்கி Mrs & Mr எனும் படத்தில் நடித்துள்ளார்.
வனிதா மகள் ஜோவிகா
வனிதாவின் மகன் ஸ்ரீஹரி தாத்தா, அப்பாவின் அரவணைப்பில் இருக்கிறார். அவர் வனிதாவுடன் பேசுவதில்லை. வனிதா, மகள்கள் ஜோவிகா மற்றும் ஜெயினிதாவுடன் வசித்து வருகிறார்.
வனிதாவின் மூத்த மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு மக்கள் மத்தியில் பிரபல்யம் ஆனார்.
அதனை தொடர்ந்து நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபனிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். இந்த நிலையில் தற்போது தனது தாய் வனிதா, ராபர்ட் மாஸ்டரை வைத்து Mrs & Mr எனும் படத்தை ஜோவிகா தயாரித்துள்ளார். படத்தை வனிதா இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ஜோவிகா ட்ரெண்டிங் உடையில் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தைில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPPCHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |