தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் இந்த நோய்கள் எல்லாம் உங்களுக்கு வரவே வராது...!
பொதுவாக நெல்லிக்காய் புளிப்பாக இருப்பதால் அதனை பலர் விரும்பி உண்ணமாட்டார்கள். ஆனால் ஒரு நெல்லிக்காயில் இருக்கும் சத்துக்களும் ஒரு அப்பிளில் இருக்கும் சத்தும் ஒரே அளவுதான் என்பது உங்களுக்கு தெரியுமா?
மேலும் நெல்லிக்காயில் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்கலாம்.
நெல்லிக்காயின் நன்மைகள்
நெல்லிக்காயில் விட்டமின் சி, விட்டமின் ஏ, அயன், கல்சியம், மெக்னீசியம் போன்றன சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது.
இவை நம் உடம்பில் ஏற்படக்கூடிய பல விதமான நோய்களை தீர்க்கும் மருந்தாகவும் பயன்படுகிறது.
சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம் போன்ற மருத்துவ முறைகளில் இவை மருந்தாக நெல்லிக்காய் பயன்படுத்தப்படுகிறது.
நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் சர்க்கரையின் அளவுகளை குறைக்க உதவும்.
தினமும் காலையில் ஒன்று அல்லது இரண்டு நெல்லிக்கனியை சாப்பிடுவதால் ரத்தத்தின் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவும்.
நெல்லிக்கனியின் உள்ள விட்டமின் சி ரத்தத்தை சுத்தப்படுத்தும் மற்றும் ரத்தத்தில் உள்ள நச்சு கழிவுகளை வெளியேற்ற உதவும்.
தினந்தோறும் தேனில் ஊறவைத்த நெல்லிக்கனியை சாப்பிட்டு வருவதன் மூலமாக உடம்பில் புதிய சிவப்பு அணுக்களை உற்பத்தி செய்கிறது.
நெல்லிக்கனியில் உள்ள வைட்டமின் சி யானது அதிக கொலஸ்ட்ராலை குறைக்கிறது மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்த உதவும்.
ஆகவே இனி தினமும் நெல்லிக்காயை ஒதுக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது.