தலைமுடி வளர்ச்சியை அதிகப்படுத்தும் நெல்லிக்காய் துவையல்
தற்போது இருக்கும் பெண்களுக்கு தலைமுதிர்வு, தலைமுடி வளர்ச்சி குறைவு இது போன்று பல பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
ஆனால் இதற்கான சரியானதொரு தீர்வை இதுவரைக்கும் பெறமுடியவில்லை என கவலைப்படுகிறீர்களா?
கவலை வேண்டாம், முதலில் நமது தலைமுடி வளராமல் போவதற்கான காரணத்தை கண்டு பிடிக்க வேண்டும். இவ்வாறு கண்டுபிடித்து விட்டால் சிகிச்சையளிப்பது இலகுவாக இருக்கும்.
அந்தவகையில் ஊட்டச்சத்து குறைபாடு, அதிகமான இரசாயனப் பொருட்கள் பயன்பாடு, முறையான பராமரிப்பு இன்மை, உடல் சூடு ஆகிய காரணங்களால் தலை முடி பிரச்சினைகள் ஏற்படுகிறது.
இந்த பிரச்சினைகளை மருத்துவத்தை தவிர்த்து உணவு பழக்கங்கள் மூலம் தான் நிரந்தரமாக கட்டுப்படுத்தலாம். மேலும் கீரைகள், ரசம், துவையல்கள் போன்ற உணவுகளின் மூலம் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டால் கட்டுப்படுத்த முடியும் என மருத்தவர்கள் பரிந்துரைத்துள்ளார்கள்.
அந்தவகையில் தலைமுடி வளர்ச்சியை தூண்டும் நெல்லிக்காய் துவையல் எவ்வாறு செய்வது என்பது குறித்து தொடர்ந்து தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
- நெல்லிக்காய் - 10
- கொத்தமல்லித்தழை - 1 கோப்பை
- கறிவேப்பிலை - ¼ கோப்பை
- பச்சை மிளகாய் - 7
- இஞ்சி - சிறு துண்டு
- சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
- தேங்காய் - சிறு துண்டு
- கடுகு - ½ டேபிள் ஸ்பூன்
- நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தயாரிப்பு முறை
1. முதலில் துவையலுக்கு தேவையான நெல்லிக்காய்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவி ஒரு பவுலில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.
2. ஒரு பாத்திரத்தை எடுத்து அடுப்பில் வைத்து பாத்திரம் சூடானதும் அதில், நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் தேங்காய், இஞ்சி, சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்க்கவும்.
3. அடுப்பில் டிம்மாக வைத்துக் கொண்டு கொடுக்கப்பட்ட பொருட்களை வதக்கிக் கொள்ளவும். 4. கடைசியாக நெல்லிக்காய், உப்பு மற்றும் கொத்தமல்லித் தழை சேர்த்து கலந்து விடவும்.
5. கலவையை கொஞ்சம் நேரம் ஆற விட்டு மிக்ஸி சார் அல்லது அம்மியில் போட்டு அரைக்கவும்.
6.துவையலை எடுத்து கடுகு, வெந்தயம் சேர்த்து தாளித்து இறக்கினால் சுவையான நெல்லிகாய் துவையல் தயார்!
நன்மைகள்
- இது போன்ற நெல்லிக்காய் சார்ந்த உணவுகள் தினமும் எடுத்து வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும்.
- நெல்லிக்காயில் இருக்கும் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பைட்டோநியூட்ரியண்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.
- இயற்கையான கண்டிஷனராகவும் பயன்படுகிறது.
- நெல்லிக்காயில் ஆன்ட்டி ஆக்ஸிடண்ட்கள் அதிகம் இருப்பதால் தலைமுடி உதிர்வை கட்டுப்படுத்தும்.