தலைமுடி வளர்ச்சியை தூண்டும் சீரம்! எப்படி செய்றாங்க தெரியுமா?
பொதுவாக தற்போது இருக்கும் பெண்களுக்கு தலைமுடி உதிர்வு என்பது பெறும் பிரச்சினையாகவுள்ளது.
இது போன்ற பிரச்சினைகளால் வெளியில் செல்லும் போது, தலையில் கை வைக்கும் போது, தலைமுடி முடி கோதும் போது என எல்லா சந்தர்ப்பங்கள் கொத்து கொத்தாக தலைமுடி கொட்டும்.
இதனை எவ்வாறு தடுக்கலாம் என பலரும் சிந்தித்தித்திருப்பார்கள். ஆனால் அதற்கு என்ன செய்வது என சந்தேகத்தில் இருப்பார்கள்.
இதன்படி, தலைமுடி என்ன காரணத்தினால் கொட்டுகிறது என்பதனை அறிந்துக் கொள்ள வேண்டும். அதாவது ஊட்டச்சத்து குறைபாடு, தவறான முடி பராமரிப்பு தயாரிப்புகளை பயன்படுத்துதல், மன அழுத்தம், மரபணு காரணங்கள் உள்ளிட்ட பல காரணங்களால் தலைமுடி சிலருக்கு இருக்கும்.
அந்த வகையில் தலைமுடி உதிர்வை கட்டுபடுத்தும் ஒரு மூலிகை நிறைந்த பேக்கை எவ்வாறு தயாரிப்பது என்பது தொடர்பில் தொடர்ந்து பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- வேப்பிலை - 3 கொத்து
- சின்னவெங்காயம்- 10
- கருஞ்சீரகம் - 1 மேசைக்கரண்டி
- பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
தயாரிப்பு முறை
- முதலில் சின்னவெங்காயத்தை எடுத்து அதனை நன்றாக சுத்தம் செய்து ஒரு பவுலில் போடவும்.
- பின்னர் வேப்பிலை, சின்னவெங்காயம் மற்றும் கருஞ்சீரகம் ஆகிய மூன்றையும் தண்ணீர் இல்லாமல் ஒரு மிக்ஸி சாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.
- அரைத்த கலவையை வெள்ளை நிற காட்டன துணியை பயன்படுத்தி சாரை மட்டும் தனியாக பிரித்தெடுக்க வேண்டும்.
- பின்னர் சாருடன் பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் கலந்துக் கொள்ளவும்.
இந்த சீரத்தை எவ்வாறு பயன்படுத்துவது, அதனால் எமக்கு என்ன பயன் என்பதனை கீழுள்ள வீடியோவில் தொடர்ந்து பார்க்கலாம்.