கொரோனாவால் தலைமுடி ரொம்ப கொட்டுதா? இழந்த முடியை மீட்டெடுக்க இந்த இயற்கை பொருட்கள் போதும்
ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வு.
தலைமுடி பிரச்சனைகளானது நாம் உண்ணும் உணவு, வாழ்க்கை முறை மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகளுடன் நேரடி தொடர்புடையவை.
மேலும் இது ஒருவர் அதிக மன அழுத்தத்தில் இருப்பதன் அறிகுறியாகவும் இருக்கலாம். கொரோனா பெருந்தொற்று பரவ ஆரம்பித்த பின், ஏராளமானோர் தலைமுடி உதிரும் பிரச்சனையை அதிகம் சந்திக்கிறார்கள்.
முக்கியமாக கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் பலர், தங்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டுவதாக புகாரளிக்கிறார்கள்.
இந்த வைத்தியங்களை பின்பற்றினால், தலைமுடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
தேங்காய் எண்ணெய்
தேங்காய் எண்ணெயில் உள்ள பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து, தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு, தலைமுடி உதிர்வதையும் குறைக்கும். அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பின் ஒரு மணிநேரம் கழித்தோ அல்லது ஒரு இரவு முழுவதும் ஊற வைத்த பின்போ தலைமுடியை அலசலாம்.
வெங்காய சாறு
வெங்காய சாற்றினை தலைச்சருமம் மற்றும் தலைமுடியில் தடவினால், அதில் உள்ள வளமான அளவிலான சல்பர் தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவும். அதற்கு வெங்காய சாற்றினை தலையில் தடவி நன்கு ஒரு மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வெங்காய சாறுடன் தேனை சேர்த்துக் கொள்ளலாம்.
நெல்லிக்காய்
வைட்டமின் சி மற்றும் பிற ஆன்டி-ஆக்சிடன்ட்டுகள் அதிகம் நிறைந்த நெல்லிக்காய், தலைமுடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதற்கு நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவது மட்டுமல்லாமல், நெல்லிக்காய் சாற்றுடன், எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, தலையில் தடவி நன்கு காய்ந்த பின், வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.
கற்றாழை
கற்றாழை தலைமுடி உதிர்வதைத் தடுப்பதோடு, தலைமுடியின் வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். அதற்கு கற்றாழையின் ஜெல்லை எடுத்து, தலைச்சருமம் மற்றும் முடியில் தடவி குறைந்தது 45 நிமிடம் ஊற வைத்து, பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.