அம்பானி வீட்டிற்கு போட்டியா? 500 கோடியில் நடந்த பிரம்மாண்டமான திருமணம்
திருமணம் என்பது வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நிகழ்வுதான். அதனால் தான் அந்த திருமணத்தை சிலர் ஆடம்பரமாக திருவிழா போல செய்வார்கள்.
இவ்வாறு அம்பானியுடன் போட்டி போடும் வகையில் இடம்பெற்ற திருமணம் ஒன்றுதான் இந்த திருமணம். 500 கோடி செலவழித்து அமோக திருமணம் ஒன்று நடந்திருக்கிறது.
கோடியில் நடந்த திருமணம்
அரசியல்வாதியும், கர்நாடகாவைச் சேர்ந்த சுரங்கத் தொழிலாளியுமான ஜனார்த்தன ரெட்டியின் மகள் பிராமணியினியிற்கும் ஹைதராபாத்தை சேர்ந்த தொழிலதிபர் விக்ரம் தேவ ரெட்டியின் மகனிற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றிருந்தது.
பெங்களூருவில் ஐந்து மற்றும் மூன்று நட்சத்திர ஹோட்டல்களில் 1500 அறைகள் விருந்தினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டது, மைதானத்தில் பாதுகாப்பு பணிக்காக 3000 பாதுகாப்புப் பணியாளர்கள் அமர்த்தப்பட்டு அமோகமாக நடைபெற்றது.
இந்த திருமணம் சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்திருந்தாலும், தற்போது வைரலாவதற்கு காரணம் மணப்பெண் அணிந்திருந்த ஆடை விபரம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இத்திருமணத்தில் ரெட்டி குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் பல கோடி மதிப்பில் ராஜா போல உடையணிந்து இருந்தனர். அதில் மணப்பெண் அணிந்திருந்த ஆடை மட்டுமே 17 கோடியாம், அதில் என்ன ஸ்பெஷல் என்றால் காஞ்சிபுரம் பட்டு சேலையில் தங்க நூல் நெய்யப்பட்டிருந்தது.
அதுமட்டுமல்லாமல் அவர் அணிந்திருந்த நகைகள் மாத்திரம் 90 இலட்சம் பெறுமதியானதாம். மணப்பெண்ணுக்கு மாத்திரம் மும்பையிலிருந்து அவருக்காகவே மேக்அப் செய்யப்பட்டதாகும் அதற்கு 30 இலட்சம் வரை செலவழித்திருக்கிறார்கள்.
இந்த திருமணத்தை அப்போது நடத்தும் போது 500 கோடி என்றால் இப்போது எப்படியும் அதையும் தாண்டி செலவழிந்திருக்கும்.