ஆனந்த் அம்பானியின் செயலால் அதிர்ந்துப்போன ஊழியர்கள்: வைரலாகும் வீடியோ
ஆனந்த அம்பானி ஊழியர் ஒருவருக்கு பிறந்தநாள் கொண்டாடி கேக் ஊட்டி விட்ட வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகின்றது.
ஆனந்த் அம்பானியின் வைரல் வீடியோ
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரனான முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி. இவர் அண்மையில் ராதிகா மெர்ச்சண்ட் என்ற பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது இணையத்தில் ஆனந்த் அம்பானியின் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. குறித்த வீடியோவில் தனது ஊழியரின் பிறந்தநாளை தனியார் ஜெட் விமானத்தில் கொண்டாடிய காட்சியைக் காணக்கூடியதாக உள்ளது.
அந்த வீடியோவில், ஆனந்த் அம்பானி ஒரு நபரின் பிறந்தநாளிற்கு பாடல் பாடி கேக் வெட்டி ஊழியருக்கு ஊட்டி விடுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
அந்த ஊழியர் ஆனந்த் அம்பானியின் கால்களைத் தொட்டு வணங்கியிருக்கிறார்.
அந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. ஜூனியர் அம்பானியின் செய்கைக்காக ஆயிரக்கணக்கான மக்கள் அவரைப் பாராட்டி வருகிறார்கள்.