இஷா அம்பானி அணிந்திருந்த லெஹங்கா என்ன விலை தெரியுமா? ஆடைக்கு பின்னால் இப்படியொரு கதையா
முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி தனது திருமணத்தில் அணிந்திருந்த ஆடை தொடர்பில் 5 ஆண்டுகள் கழித்து சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகியிருக்கின்றது.
இஷா அம்பானி திருமணம்
இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் தான் இஷா அம்பானி. இவருக்கு 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ஆம் திகதி பிரமல் குழுமத் தலைவர் அஜய் பிரமல் தலைவர் மகன் ஆனந்த் பிரமலுடன் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணம் ஆண்டில்லா பங்களா வண்ணவிளக்குகளால் அலங்கரிப்பட்டிருந்தது. இந்த திருமணத்திற்கு மாத்திரம் 700 கோடி வரையிலும் செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், இத்திருமணத்திற்கு உறவினர்கள், திரைப்பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் இவர்களுக்கு திருமணம் முடிந்து 5ஆண்டுகள் ஆகின்றது மேலும் இத்தம்பதிகளுக்கு இரட்டைக்குழந்தைகள் உள்ளனர்.
திருமண ஆடையில் மறைந்திருக்கும் சுவாரஸ்யம்
இந்நிலையில் இஷா அம்பானி திருமணமத்தில் அணிந்திருந்த ஆடைத் தொடர்பில் தற்போது ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆடையின் விலை மாத்திரம் 90கோடியாகும். அந்த விலைக்கு வாங்க இந்த ஆடையில் என்ன இருக்கிறது என்று பார்த்தால் அதில் ஒரு சிறப்பு செய்தி இருக்கிறது.
இவரின் திருமண ஆடையை வடிவமைத்தவர் பாலிவுட் பிரபலங்களின் ஆடைகளை வடிவமைக்கும் அபு ஜானி சந்தீப் கோஸ்லா. இந்த ஆடையில் மென்மையான சிவப்பு ஜர்தோசி பார்டர்கள், முகைஷ் மற்றும் நக்ஷி வேலைப்பாடுகளுடன் கூடிய மலர் வடிவங்கள் இருந்தன.
இஷாவின் தோளில் கண்ணை கவரும் எம்பிராய்டரி டிசைனுடன் அடர் சிவப்பு நிறத்தில் மேலாடை கொடுக்கப்பட்டிருந்தது. தலையை மூட வெள்ளை நிற துப்பட்டாவும் கொடுக்கப்பட்டிருந்தன. அந்த துப்பட்டாவானது 35 ஆண்டுகளுக்கு முன்பு நிதா அம்பானி தனது திருமணத்திற்கு அணிந்த புடவையாகும்.
மேலும், இஷா அம்பானியின் திருமணத்தில் அணிந்திருந்த விலையுர்ந்த நெக்லஸை தான் தன் மகன் ஆனந்த் அம்பானி நிச்சயத்திலும் நீதா அம்பானி அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.