விருது விழாவில் ஆல்யாவுக்கு வந்த Proposal.. வாயடைத்து போன பிரபலம்- அலறும் அரங்கத்தினர்
விருது விழாவில் ஆல்யாவுக்கு வந்த பிரபோசலை பார்த்து அரங்கத்தினர் அதிர்ந்து போகும் அளவுக்கு கத்த ஆரம்பித்துள்ளனர்.
ஆல்யா மானசா
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா.
இவர் முதன்முதலில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “ராஜா ராணி” சீரியல் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். இதற்கிடையில், அவருடன் இணைந்து நடித்த கார்த்திக் சஞ்சீவை காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு செய்து கொண்டார்கள்.
திருமணத்துக்கு பின்னர் குழந்தைகள் பிறந்ததால் சில ஆண்டுகள் சீரியல் பக்கம் தலைகாட்டாமல் இருந்த ஆல்யா மானசா, கடந்த 2022-ம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான இனியா சீரியலில் நாயகியாக நடித்து வந்தார்.

அதே தொலைக்காட்சியில் கார்த்திக் சஞ்சீவ் கயல் சீரியலில் நாயகராக நடித்து வருகிறார். சின்னத்திரை நாயகிகளில் அதிக சம்பளம் வாங்கும் ஆல்யா ஒரு நாளைக்கு சீரியல் நடிப்பதற்கு மாத்திரம் ரூ.50 ஆயிரம் சம்பளமாக வாங்கி வந்ததாக கூறப்பட்டது.
சின்னத்திரை மூலம் வளர்ந்து வரும் சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடி, அண்மையில் சென்னையில் பல கோடி செலவில் பெரிய வீட்டை கட்டி அதில் குடியேறினர்.
மேக்கப் இல்லாத புகைப்படம்
இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா மானசா தற்போது சீரியலில் நடிப்பதை தாண்டி, நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்க ஆரம்பித்து விட்டார்.

அப்படி ஜு தமிழ் விருது விழா தொகுத்து வழங்கும் பொழுது சீரியலில் அவருடன் இணைந்து நடிக்கும் நடிகர் Dating praposal செய்த காட்சி அங்கிருந்தவர்கள் இடையில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அதற்கு ஆல்யாவும் வருவேன் என்று பதில் கொடுத்திருக்கிறார்.
இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், “ ஆல்யாவுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்..” என்றும் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |