நீச்சல் குளத்தில் கணவருடன் சாகசம் செய்த சிவாங்கி அம்மா.. பார்த்தவுடன் ஷேர் செய்யும் நெட்டிசன்கள்
நீச்சல் குளத்தில் சாகசம் செய்வதாக கூறிய சிவாங்கி அம்மா செய்த அலப்பறைகள் இணையவாசிகள் மத்தியில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.
சிவாங்கி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக அறிமுகமாகியவர் சிவாங்கி.
இவர் பிரபல பாடகி ஸ்ரீமதி பின்னி கிருஷ்ணகுமாரின் மகள் ஆவார்.
போட்டியாளராக கலந்து கொண்டு தன்னுடைய காந்தக்குரலால் அனைவரின் மனதையும் கொள்ளைக் கொண்டவர் சிவாங்கி.
பாடகியாக இருந்த சிவாங்கி குழந்தை போல நகைச்சுவையாகவும் வெளிப்படையாகவும் பேசுவதால் பலருக்கும் பிடித்தமானவராக மாறி விட்டார்.

இதனை தொடர்ந்து, அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பை சரியாக பயன்படுத்திய சிவாங்கி கோமாளியாக இருந்து சமைக்கவே தொடங்கிவிட்டார்.
இளமை மாறாத தம்பதி
இந்த நிலையில் தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பதுடன், ஆல்பம் பாடல்களையும் பாடி வருகிறார்.
அந்த வகையில்,தங்கம் போன்று மின்னும் சிவாங்கியின் அம்மா- அப்பா இருவரும் நீச்சல் குளத்தில் குளித்து கொண்டு வெளியிட்ட காணாளி இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது, இருவரும் குளித்து கொண்டு சாகசம் செய்வதாக கூறி, பாடல் பாடிக் கொண்டிருக்கிறார். இந்த காணொளி இணையவாசிகளின் கவனத்திற்கு சென்றுள்ளது. அத்துடன், “உங்களுக்கு இப்படியும் பாடல் வருமா?” என நகைக்கும் வகையில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |