ஆல்யா மானசாவின் ஆரம்ப சம்பளம் இவ்வளவு தானா? முதன் முதலாக இந்த வேலைதான் செய்திருக்கிறார்
ஆல்யா மானசா தற்போது அவரின் யூடியூப் சேனலில் தனது முதல் மாத சம்பளம் குறித்தும் முதல் வேலைக்குறித்தும் சில தகவல்களை பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
ஆல்யா மானசா
சீரியலில் பிரபல நடிகைக்கு இணையாக பார்க்கப்படுவர் தான் ஆல்யா மானசா. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானார்.
அதற்குப் பிறகு பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார். அதில் தனது இயல்பான நடிப்பால் அதிகம் பிரபல்யமானார்.
இவர் அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர்களுக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர்.
இவர் இரண்டுக் குழந்தைகள் பெற்றுக்கொண்ட போதும் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு அடுத்தடுத்த சீரியலிலும் நடித்து வருகிறார்.
முதல் வேலை, முதல் சம்பளம்
ஆல்யா மானாசா தனது யூடியூப் சேனலில் தனது முதல் சம்பளம் பற்றி உருக்கமாக சில தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார்.
அதில், ஆல்யா தனது படிப்பை முடித்து விட்டு யமாஹா ஷோரூமில் வெறும் 5000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்திருக்கிறார்.
இதைக் கேட்ட ரசிகர்கள் இப்போது சின்னத்திரையில் சூப்பர் ஹிட் நடிகையாக இருக்கும் ஆல்யாவிற்கு இவ்வளவு தான் முதல் சம்பளமா என்று வியப்பில் இருந்தாலும் ஒரு சிலர் 5000 ரூபாய்க்கு வேலை செய்திருந்தாலும், தற்போது இலட்சக்கணக்கில் சம்பளம் பெறுகிறார் தானே என பெருமைப் பட்டுக் கொள்ளுங்கள் என்றும் கூறி வருகின்றனர்.