நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்த பிரதாப் போத்தன்! இறப்பதற்கு முன்பே மரணம் குறித்த பதிவு
நடிகர் பிரதாப் போத்தன் ஆசையாக காதலித்து திருமணம் செய்து கொண்ட ராதிகாவை விவாகரத்து செய்தது பலரும் அறியாத நிலையில், அதற்கான காரணத்தினை தற்போத காணலாம்.
நடிகர் பிரதாப் போத்தன்
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும் பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்தவர் பிரதாப் போத்தன்(69), கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை காலமானார்.
அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். சினிமாவில் பல்வேறு வெற்றிகளைக் குவித்த பிரதாப் போத்தனுக்கு, சொந்த வாழ்க்கை அவ்வளவு வெற்றிகரமானதாக அமையவில்லை.
ராதிகாவுடன் காதல்
குறிப்பாக இவர் இயக்கிய முதல் படம் ‘மீண்டும் ஒரு காதல் கதை’. படத்தின் தலைப்பை போலவே இவரது காதல் கதை ஆரம்பித்ததும் இந்த படத்தில் தான். இப்படத்தை தயாரித்த நடிகை ராதிகா மீது காதல் வயப்பட்டார் பிரதாப் போத்தன்.
அக்காலத்தில் இவர்களைப் பற்றிய காதல் கிசுகிசுக்களும் பரபரப்பாக பேசப்பட்டதால், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அதே ஆண்டில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
ஆனால் ஆசை ஆசையாக காதலித்து திருமணம் செய்த இந்த ஜோடி, திடீர் கருத்து வேறுபாடு காரணமாக ஒரே ஆண்டில் பிரிந்து விவாகரத்து பெற்றனர்.
முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததை அடுத்து 1990-ம் ஆண்டு அமலா சத்யநாத் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்ட பிரதாப் போத்தன், 2012ம் ஆண்டு அவரையும் விவாகரத்து பெற்றார். இவர்களுக்க கேயா போத்தன் என்கிற மகளும் உண்டு.
இறப்பதற்கு முன்பு கடைசி பதிவு
இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் இவர் கடைசியாக போட்ட முகநூல் பதிவும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இதில் வாழ்க்கையின் தத்துவத்தையும், வருங்கால சந்ததியினர் குறித்தும் சிரித்து கொண்டே அழும் ஸ்மைலியுடன் பதிவிட்டுள்ளார்.
இந்த பதிவில்... பெருக்கல் என்பது ஒரு விளையாட்டு, ஒவ்வொரு தலைமுறையும் ஒரே மாதிரியாக தான் விளையாடி வருகிறார்கள் என தெரிவித்துள்ளார்.
அதே போல் ஞாயிற்று கிழமை அன்று மரணம் குறித்து இவர் போட்டுள்ள பதிவு ஒன்றும் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.