4 வாரத்தில் 10 கிலோ எடை குறைத்த ஆல்யா மானசா! அவரே பகிர்ந்த சீக்ரெட் டிப்ஸ்
சீரியல் நடிகையான ஆல்யா மானாசா 1மாதத்தில் 10கிலோ எடை குறைத்தது எப்படி என்பது பற்றி நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.
ஆல்யா மானசா
சீரியலில் பிரபல நடிகைக்கு இணையாக பார்க்கப்படுவர் தான் ஆல்யா மானசா. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானார்.
அதற்குப் பிறகு பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார். அதில் தனது இயல்பான நடிப்பால் அதிகம் பிரபல்யமானார்.
இவர் அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர்களுக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர்.
இவர் இரண்டுக் குழந்தைகள் பெற்றுக்கொண்ட போதும் தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக் கொண்டு அடுத்தடுத்த சீரியலிலும் நடித்து வருகிறார்.
உடல் எடைக்குறைத்தது எப்படி?
குழந்தைப் பெற்றுக்கொண்ட பிறகு உடல் எடையைக் குறைக்க நினைத்திருக்கிறார் ஆல்யா.
எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக உணவுகளைத் தவிர்க்காமல் உடலுக்கு தேவையான என்னென்ன சத்துக்கள் தேவையே அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், எடைக் குறைப்பதற்கு தண்ணீர் மிக முக்கியம், தினமும் காலையில் தண்ணீர் குடித்து விட்டு தேவையான உடற்பயிற்சி செய்து தேவையான பழங்களும், காய்கறிகளும் எடுத்துக்கொண்டால் உடல் எடையைக் குறைக்க அதிகம் உதவும்.
ஆல்யா மானாசா 10கிலோ குறைத்தது பற்றியும் என்ன சாப்பிட வேண்டும், என்ன சாப்பிட வேண்டும் என்பது பற்றியும் காணொளியில் தெளிவாக கூறியிருக்கிறார்.
அந்தக் காணொளி இதோ,