ஹிப் ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனல் முடக்கி பாடல்களை அழித்தது யார்? பெரும் அதிர்ச்சியில் ரசிகர்கள்
இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் பக்கம் முடக்கப்பட்டிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சேனலில் இருந்த ஏராளமான பாடல்கள் அழிக்கப்பட்டுள்ளதுடன், சேனலில் பெயரும் மாற்றப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
ஹிப்ஹாப் தமிழா ஆதியின் யூடியூப் சேனலை சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்தொடர்ந்து வந்துள்ளனர்.
இதனால் ஆதியின் ரசிகர்கள் அதிர்ச்சியிலும் கவலையும் குழப்பத்திலும் உள்ளனர். இதேவேளை, இண்டிபெண்டண்ட் இசை மரபை தமிழில் மீண்டும் புதிய வடிவத்தில் தொடங்கி வைத்த ஹிப் ஹாப் தமிழா ஆதியின் பல முக்கிய பாடல்களுக்கு ரசிகர்கள் ஏராளமாய் உள்ளனர்.
தொடர்ந்து ஆதியின் குறிப்பிட்ட சில பாடல்களை மட்டுமே ஆன் ரிப்பீட் மோடில் போட்டு கேட்கும் தீவிர ரசிகர்களும் அவரது பாடல்களுக்கு உண்டு எனபதும் குறிப்பிடத்தக்கது.
