மீண்டும் சீரியலில் ரீஎன்ட்ரி கொடுத்த பிரபல நடிகை! எந்த சீரியல் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகராசி தொடரின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் ஸ்ரீத்திகா.
2019ம் ஆண்டு எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் தொடங்கப்பட்ட மகராசி சீரியலை தற்போது சுந்தரேஸ்வரன் இயக்கி வருகிறார்.
இதில் கதாநாயகியாக நடித்து வருபவர் திவ்யா ஸ்ரீதர், மேலும் எஸ்.எஸ்.ஆர். ஆர்யான், விஜய், ராம்ஜி, ரியாஸ் கான், காயத்ரி யுவராஜ், மகாலட்சுமி உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.
தற்போது கொரோனா ஊரடங்கு காலம் என்பதால் சீரியலில் நடிக்க திவ்யா ஸ்ரீதர் தயக்கம் காட்டியதாக தெரிகிறது.
தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், திவ்யா ஸ்ரீதர் வராததால் அவருக்கு பதிலாக புதிய நாயகியை களமிறக்க நாடகக்குழு முடிவெடுத்தது.
இதன்படி ஏற்கனவே பரீட்சயமான ஸ்ரீத்திகா சனீஷை ஒப்பந்தம் செய்துள்ளனர், இவர் நாதஸ்வரம் சீரியல் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.