மகனின் வளர்ச்சியைப் பார்த்து வியந்துப் போன ஐஸ்வர்யா ரஜினிகாந்த்: வைரலாகும் இன்ஸ்டா பதிவு
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மூத்த மகன் யாத்ராவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பதிவு தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
சினிமாத்துறையில் காதலித்து திருமணம் செய்துக் கொள்வது காலம் காலமாக நடைபெறும் ஒரு விடயம் தான். இவ்வாறு திருமணம் செய்துகொண்டு பலர் தற்போது விவாகரத்தை அறிவித்து வருகின்றார்கள்.
இவ்வாறு இருக்கையில் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்திருந்தனர். தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி திருமணம் செய்துக் கொண்டனர்.
மேலும் இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்மார் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் திடீரென தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர்.
வைரலாகும் பதிவு
தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தற்போது தன் தந்தையை வைத்து லால் சலாம் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், தனது மூத்த மகன் யாத்ராவின் பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.
அதில் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் பதிவொன்றை பதிவிட்டிருக்கிறார். அந்தப் பதிவில் “உன்னை நினைத்து மிகவும் பெருமை படுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், யாத்ரா ரஜினியின் பாதியாகவும், தனுஷின் பாதியாகவும் வளர்ந்திருக்கிறார் என்று அனைவரும் கமெண்ட செய்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |