10 நாட்களுக்கு பின்... ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ
தனுஷ் விவாகரத்துக்கு செய்திக்கு பின்னர், அடுத்த கட்ட வேலைகளில் பிஸியாகிவிட்டார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.
அவ்வப்போது, படப்பிடிப்புக்கு நடுவே உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தையும் வீடியோவையும் வெளியிட்டும் வருகிறார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் நடிகர் தனுஸை 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி திருமணம் செய்துக் கொண்டார்.
இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்மார் இருக்கின்றனர். அண்மையில் இவர்கள் இருவரும் திடீரென தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர்.
இந்த செய்தி அவர்களின் குடும்பம் மாத்திரமல்லாது மொத்த திரை உலகையும் அதிர்ச்சியாக்கியது. ஆனால் இருவரும் விவாகரத்திற்கான காரணத்தை இன்னும் விளக்கமாக கொடுக்கவில்லை.
ஹெவி வேர்க் அவுட் செய்யும் ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா தற்போது லால் சலாம் படத்தினை இயக்கி வருகிறார். இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த் நடிக்கிறார்கள்.
இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.
இந்நிலையில், ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறித்தனமாக வேர்க் அவுட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு 10 நாட்களுக்கு பிறகு வேர்க் அவுட் செய்ததாக ஐஸ்வர்யா அவர் அந்தப் பதிவை பதிவிட்டிருக்கிறார். மேலும், லால் சலாம் திரைப்படத்தில் இருக்கும் காட்சிகளையும் பதிவிட்டிருக்கிறார்.
நான் திருடியதற்கு காரணம் ஐஸ்வர்யா தான்! ஈஸ்வரியால் அம்பலமாகிய ஐஸ்வர்யாவின் சுயரூபம்