தனுஷ் இல்லாமல் தந்தையின் காலில் விழுந்த ஐஸ்வர்யா! வைரலாகும் புகைப்படம்
தனுஷ் இல்லாமல் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த ஆண்டு பொங்கல் விழாவை தனது தந்தையுடன் மகிழ்ச்சியாக கொண்டாடிய புகைப்படம் வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா பொங்கல் கொண்டாட்டம்
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த நிலையில், யாத்ரா லிங்கா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு தனுஷை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவிப்பு செய்திருந்தார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு தந்தையுடன் ஐஸ்வர்யா பொங்கல் திருவிழாவை கொண்டாடியுள்ளார். அத்தருணத்தில் தனது இரண்டு மகன்களுடன் ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசி வாங்கியுள்ளார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்களது முடிவில் உறுதியாக உள்ள நிலையில், குழந்தைகள் விடயத்திலும், பொது நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்துகின்றனர்.
விவாகரத்து முடிவுக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ள ஐஸ்வர்யா, நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரை வைத்து கிரிக்கெட் சம்பந்தமான லால் சலாம் என்கிற படத்தை இயக்க உள்ள நிலையில், படப்பிடிப்பு பணிகளும் நடந்து வருகின்றது.
இந்நிலையில் இந்த வருட பொங்கல் தன்னுடைய அப்பா ரஜினிகாந்த் மற்றும் அம்மா லதா ரஜினிகாந்த் ஆசிர்வாதத்துடன், மகன்கள் யாத்ரா மற்றும் லிங்க ஆகியோருடன் சேர்ந்து கொண்டாடிய புகைப்படங்களை வெளியிட அந்த புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.