மகனின் விழாவை புறக்கணித்தாரா தனுஷ்? மீண்டும் மோதலில் ஐஸ்வர்யா தனுஷ்
கடந்த ஆண்டு மகனின் பள்ளி விழாவில் கலந்து கொண்ட தனுஷ் இந்த ஆண்டு வராமல் இருப்பதால் பல கேள்விகள் எழுந்துள்ளது.
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா
ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்த நிலையில், யாத்ரா லிங்கா என்ற இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த ஆண்டு தனுஷை விவாகரத்து செய்துவிட்டதாக அறிவிப்பு செய்திருந்தார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் தங்களது முடிவில் உறுதியாக உள்ள நிலையில், குழந்தைகள் விடயத்திலும், பொது நிகழ்ச்சியிலும் கவனம் செலுத்துகின்றனர்.
விவாகரத்து முடிவுக்கு பின்னர் மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்த துவங்கியுள்ள ஐஸ்வர்யா, நீண்ட இடைவேளைக்கு பின்னர் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோரை வைத்து கிரிக்கெட் சம்பந்தமான லால் சலாம் என்கிற படத்தை இயக்க உள்ள நிலையில், படப்பிடிப்பு பணிகளும் நடந்து வருகின்றது.
மகன் பள்ளி விழாவில் ஐஸ்வர்யா
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது மகன்கள் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரின் பள்ளி ஸ்போர்ட்ஸ் டே விழாவில் பங்கேற்று அதன் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
கடந்தாண்டு யாத்ரா அவரது பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதற்கான விழா சென்னையில் அவரது பள்ளியில் நடைபெற்ற நிலையில், இதில் தனுஷும், ஐஸ்வர்யாவும் கலந்து கொண்டு, மகனோடு இணைந்து புகைப்படமும் எடுத்துள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் யாத்ரா மற்றும் லிங்கா ஆகியோரின் பள்ளி ஸ்பேர்ட்ஸ் டே விழா நடைபெற்றது. இதில் ஐஸ்வர்யா கலந்து கொண்டு மகன்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
இறுதியாக தொடர் ஓட்டப்பந்தயமான ரிலேவில் மூத்த மகன் யாத்ரா முதலிடம் பிடித்து கோப்பை வென்றுள்ள புகைப்படத்தினை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில் ஐஸ்வர்யா, "சூரியன் எவ்வளவு சுட்டெரித்தாலும் இந்த குழந்தைகளின் விளையாட்டு ஆர்வத்தை தடுத்து நிறுத்த முடியாது...
காலை சூரிய ஒளியில் ஓடி அவர்கள் ஒளிர்கிறார்கள். அங்கிருந்த எனது மகன்களை பார்த்து மகிழ்ந்து பிரகாசிக்கிறேன்" என்று வாசகங்களை கேப்சனாக வைத்துள்ளார்.