தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்திற்கு ஸ்ருதிஹாசன் காரணமா? அவரே கூறிய விளக்கம்
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்துக்கு ஸ்ருதிஹாசன் தான் காரணம் என எழும்பிய வதந்திகளுக்கு மனம் திறந்து பதில் கூறியிருக்கிறார் ஸ்ருதிஹாசன்.
தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து
சினிமாத்துறையில் காதலித்து திருமணம் செய்துக் கொள்வது காலம் காலமாக நடைபெறும் ஒரு விடயம் தான். இவ்வாறு திருமணம் செய்துகொண்டு பலர் தற்போது விவாகரத்தை அறிவித்து வருகின்றார்கள்.
இவ்வாறு இருக்கையில் தனுஷ்-ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் தங்களின் விவாகரத்தை அறிவித்திருந்தனர். தனுஷ்-ஐஸ்வர்யா இருவரும் 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி திருமணம் செய்துக் கொண்டனர்.
மேலும் இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்மார் இருக்கின்றனர். இவர்கள் இருவரும் திடீரென தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர்.
இந்த செய்தி அவர்களின் குடும்பம் மாத்திரமல்லாது மொத்த திரை உலகையும் அதிர்ச்சியாக்கியது. ஆனால் இருவரும் திருமணத்திற்கான காரணத்தை இன்னும் விளக்கமாக கொடுக்கவில்லை.
தனுஷுடன் டேட்டிங் செய்த ஸ்ருதிஹாசன்
ஐஸவர்யா இயக்கத்தில் தனுஷ் மற்றும் ஸ்ருதிஹாசன் இணைந்து நடித்த திரைப்படம் தான் 3.
இந்த திரைப்படத்திற்குப் பின்னர் தான் தனுஷுடன் ஸ்ருதிஹாசன் டேட்டிங் செய்ய ஆரம்பித்திருப்பதாகவும், ஐஸ்வர்யாவிற்கு துரோகம் செய்து விட்டதாகவும் பல தகவல்கள் வெளியாகியிருந்ததது.
இது குறிந்து அமைதியாக இருந்த ஸ்ருதிஹாசன் தற்போது இது தொடர்பில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது, தனுஷ் தன்னுடைய நல்ல நண்பர் மட்டுமே, தொழில் ரீதியாகவும் தனக்கு பல உதவிகளை செய்திருக்கிறார்.
இது மட்டுமல்ல என்னை சுற்றி பத்தாயிரம் வதந்திகள் சூழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறது என்பது எனக்கு தெரியும், ஆனால் உண்மை இது தான்.
இதை என் உடலில் மைக்கோர் சிப் வைத்து கொண்டு போய் அனைவரிடமும் வதந்தியை நியாயப்படுத்த முடியாது.
என அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.