கணவன் இல்லாமல் மகன்களுடன் புத்தாண்டு கொண்டாடிய ஐஸ்வர்யா: இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!
ரஜினிகாந்தின் மூத்தமகளான ஐஸ்வர்யா ரஜனிகாந்த் தனது பிள்ளைகளுடன் புத்தாண்டுக் கொண்டாடியதை புகைப்படங்களோடு வெளியிட்டிருக்கிறார். இது தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா சினிமாவில் இயக்குனராக பணியாற்றி வருகிறார்.
இவர் நடிகர் தனுஸை 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் திகதி திருமணம் செய்துக் கொண்டார். இவர்கள் இருவருக்கும் யாத்ரா, லிங்கா என இரு மகன்மார் இருக்கின்றனர்.
அண்மையில் இவர்கள் இருவரும் திடீரென தங்களின் விவாகரத்தை கடந்த ஆண்டு அறிவித்திருந்தனர். இந்த செய்தி அவர்களின் குடும்பம் மாத்திரமல்லாது மொத்த திரை உலகையும் அதிர்ச்சியாக்கியது. ஆனால் இருவரும் விவாகரத்திற்கான காரணத்தை இன்னும் விளக்கமாக கொடுக்கவில்லை.
மகன்களுடன் புத்தாண்டுக் கொண்டாட்டம்
இந்நிலையில் நேற்று முன்தினம் அனைவரும் தமிழ் புத்தாண்டை வெகு சிறப்பாக கொண்டாடிய நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் தனது மகன்களுடன் கொண்டாடியிருக்கிறார்.
ஐஸ்வர்யா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தமது மகன்களுடன் இறை வழிபாடுகளை எல்லாம் முடித்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
மேலும் தனது நண்பர்கள் மற்றும் லால் சலாம் படத்தில் பணிபுரியும் கலைஞர்களுக்கு விருந்து வைத்து அந்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.