தமிழ் புத்தாண்டு ராசிபலன் 2023: குருவின் அருளால் எதிர்பாராமல் அரங்கேறும் பேரதிர்ஷ்டம்
உலகின் பல பெருமைகளை கொண்ட தமிழ் மக்களால் புதுவருட பிறப்பு சித்திரை மாதத்தில் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தமிழ் புத்தாண்டு
“கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி” என்ற பெருமைக்குரிய தமிழினம் ஆனது ஒவ்வொரு வருடமும் தமிழில் சித்திரை முதலாம் திகதியை வருடப்பிறப்பாக கோலாகலமாக கொண்டாடப்படுகின்றது.
தமிழர்கள் ஆரம்ப காலங்களில் இருந்தே வானியல் ஜோதிடங்களில் சிறந்து விளங்கியதால் ஒரு தமிழ் ஆண்டு காலரீதீயாக சிறப்பாக கணிக்கிடப்படுகின்றது.
அதாவது சூரியன் மேஷ ராசியில் பிரவேசிக்கும் போது தொடங்கும் வருடம் மீன ராசியில் பிரவேசிக்கும் போது முடிவடைகின்றது. இதனடிப்படையில் பஞ்சாங்கங்களின் வாயிலாக தமிழ் புத்தாண்டானது கணிப்பிடப்படுகிறது.
சித்திரை மாதம் காலநிலை அடிப்படையில் வசந்த காலத்தின் ஆரம்பமாகும் இதனால் மக்கள் மகிழ்ச்சியோடு இப்புத்தாண்டை வரவேற்கின்றனர்.
தமிழர்களின் நாட்காட்டி 12 ராசிகளை அடிப்படையாக கொண்டதாகும். இதனால் ராசிகளில் முதலாவதான மேட ராசியில் சூரியன் நுளையும் முதல் நாள் தமழிர்களின் புதுவருடம் ஆகும்.
தற்போது புத்தாண்டில் 12 ராசிகளில் முதல் 3 ராசிகளான மேஷம், ரிஷபம், மிதுனம் முடிந்த நிலையில் தற்போது கடகம், சிம்மம், கன்னி ராசிகளின் பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம்.