தன்னையே திருமணம் செய்து கொண்ட இளம் பெண்: 24 மணித்தியாலத்திற்கு பின்னர் என்ன செய்திருக்கிறார் தெரியுமா?
தன்னை தானே திருமணம் செய்துக் கொண்டு அடுத்தநாள் விவாகரத்து செய்துக் கொண்ட பெண் தொடர்பில் தற்போது செய்திகள் பல வைரலாகி வருகின்றது.
தன்னையே திருமணம் செய்துகொண்ட பெண்
திருமணம் என்று சொன்னாலே தற்போது புது புது முறையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த திருமணத்திற்கு காத்துக் கொண்டிருக்கும் 90ஸ் கிட்ஸ்களுக்கு கடுப்பை கிளப்பும் வகையில் தற்போது சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
கடந்த மாதம் அர்ஜென்டினாவைச் சேர்ந்த சோஃபி மௌர் என்ற 25 வயதுடைய பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளப் போவதாக இணையத்தில் ஒரு பதிவில் அறிவித்தார்.
அதன்படி தன்னை திருமணம் செய்துகொள்வதற்காகத் திருமண ஆடை மற்றும் கேக் போன்றவற்றைத் தானே தயார் செய்தாக கூறியுள்ளார்.
மேலும் திருமண உடையில் புகைப்படங்களையும் எடுத்து இணையத்தை பதிவிட்டிருந்தார். 24 மணிநேரத்திற்குப் பிறகு, சோஃபி ஒரு நாள் தனது சொந்த நிறுவனத்தில் நேரத்தைச் செலவழித்த பிறகு பெப்ரவரி 21 தனது விவாகரத்தைத் தொடர முடிவு செய்தார்.
இந்த விவாகரத்து தொடர்பில் அவர் கூறியதாவது, "இன்று, என் வாழ்க்கையின் மிக மோசமான தருணங்களில், நான் ஒரு திருமண ஆடையை வாங்கி என்னை திருமணம் செய்து கொள்ள ஒரு திருமண கேக் ஒன்றையும் செய்தேன்" என்று கூறினார்.
இதற்கு இணையத்தில் உள்ளவர்கள் அவருக்கு கலவையான எதிர்வினைகளை அளித்தனர் எனத் தெரிவித்திருந்தனர்.
actualización: voy un día casada conmigo y no me aguanto más, estoy viendo como es el tema del divorcio por las dudas https://t.co/0qyOtwDiH3
— Sofi ? (@sofimaure07) February 20, 2023
இந்த செய்தியானது தற்போது பலரையும் ஆச்சரியப்படவைத்தாலும், இதற்கு பலரும் பல வேடிக்கையான கமண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.