திருடனாக மாறிய பிரபல இயக்குனர்! இரவில் பெண்களை குறிவைத்தது அம்பலம்
தமிழகத்தின் சென்னையில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த பிரபல துணை இயக்குனரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயலட்சுமி, கடந்த 25ம் தேதி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் செயினை திருடிச் சென்றார்.
இதனையடுத்து அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் விஜயலட்சுமி புகாரளித்தார், இதனடிப்படையில் வழக்குபதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் விஜய்பாபு என்பவர் குற்றவாளி என தெரியவந்தது, இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து விசாரணை நடத்திய நிலையில், விஜய்பாபு துணை இயக்குனராக பணியாற்றி வந்தது தெரியவந்தது.
படங்களில் வாய்ப்பு கிடைக்காததால் திருடனாக மாறியதும் தெரியவந்தது, மேலும் இரவில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டும் வந்துள்ளார்.