முதல் முறையாக விவாகரத்திற்கான காரணத்தை ஊடகத்தின் முன் போட்டுடைத்த பிக்பாஸ் பிரபலம்!
பிரபல நடிகை காயத்ரி ரகுராம் தன்னுடைய விவகாரத்து தொடர்பில் மனம் திறந்துள்ளார்.
பிக் பாஸ் வீட்டில் காயத்ரி
பிரபல தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பங்கேற்ற காயத்ரி ரகுராம், சினிமாவில் ஆரம்பக்கட்டத்தில் மிகவும் பிரபல்யமான நடிகையாக திகழ்ந்தார்.
பல இன்னல், துன்பங்கள், விமர்சனங்களுக்கு முகங்கொடுக்கும் காயத்ரி 90 களில் சினிமாத்துறையில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர். இவரை பிரபு தேவா படத்தில் தான் கதாநாயகியாக அறிமுகம் செய்தார்கள்.
இதனை தொடரந்து தன்னுடைய 21 வயதிலையே அமெரிக்காவை சேர்ந்த தீபக் சந்திரசேகர் எனும் சாஃப்ட்வெர் இன்ஜினியரை கடந்த 2006ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். ஆனால் இந்த வாழ்க்கை இவருக்கு நிலைக்கவில்லை.
விவகாரத்திற்கான காரணம்
மேலும் திருமணம் முடிந்து இரண்டு வருடங்களிலிலேயே விவாகரத்து பெற்றுள்ளார். இது குறித்து பலர் கேட்டாலும் பதிலளிக்காத காயத்ரி, முதல் முறையாக மனம் திறந்து ஊடகமொன்றிற்கு பேட்டிக் கொடுத்துள்ளார்.
இந்த வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் அவர் திருமணம் குறித்து தெரிவிக்கையில், “ நாங்கள் இருவரும் சிறுவயதில் திருமணம் செய்து கொண்டோம்.
எங்கள் இருவருக்கும் சில பல வாக்குவாதங்கள் மற்றும் கருத்து வேறுபாடுகள் இருந்தது, இதனால் தான் பிரிந்தோம். தொடர்ந்து அவர் தற்போது வேறொரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார்.
அவரையும் நான் குறை கூறமாட்டேன். இது குறித்து மீண்டும் பேசுவதில் எவ்விதமான பயனும் இல்லை” என வருத்தமாக தெரிவித்துள்ளார்.
இவரின் இந்த பதிவை பார்த்த பலர் இவருக்கு ஆறுதல் கூறும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.