நம்ம அதிதியா இது? “Cringe” என கலாய்த்த ரசிகர்களுக்கு தரமாக பதிலடிக் கொடுத்த நடிகை!
கிரின்ஜி நடிகை என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அதிதி சங்கர் முதல் முறையாக ரசிகர்களுக்கு தரமான பதிலடிக் கொடுத்துள்ளார்.
அதிதி சங்கர்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் அதிதி சங்கர்.
இவர் கார்த்தி நடிப்பில் வெளியான “விருமன்” படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.
இவரின் முதல் படத்திலேயே நடிப்பு திறமையை காட்டி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார்.
இந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு திரைப்படம் நடித்துள்ளார்.
அதிதி சங்கர் பேட்டிகளில் பங்குக் கொள்ளும் போது நகைச்சுவை என்ற பெயரில் மொக்கையாக பேசிக் கொண்டிருப்பார்.
ரசிகர்களுக்கு தரமான பதிலடிக் கொடுத்த அதிதி
இதனால் கடுப்பான ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகிறார்கள்.
இது குறித்து அதிதியிடம் பேட்டியொன்றில் “ நீங்கள் சங்கர் சார் மகள் என கூறும் போது அவர் போல் இருப்பீர்கள் என நினைத்தேன்.
ஆனால் இது உண்மையல்ல நீங்கள் கிரின்ஜி தனமாக இருக்கீங்க..” என கூறியிருக்கிறார்கள்.
இதற்கு பதிலளித்த அதிதி,“ நா ஏ அப்பா போல் இருக்க, எனக்கு ஒன்றும் அவர் வயதில்லை..” என புன்னகையுடன் கூறியுள்ளார்.
இந்த பதிலடியை ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |