எனது குரல் செட் ஆகவில்லை! ஷங்கர் மகளின் வாய்ப்பு குறித்து வருத்தத்துடன் ராஜலட்சுமி விளக்கம்
தமிழ் சினிமாவிற்கு வருகை தந்துள்ள இயக்குனர் ஷங்கரின் மகளால் அடிக்கடி புதிய சர்ச்சை எழுந்துள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'விருமன்'. அதிதி சங்கர், சூரி, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஷங்கர் மகள் விளக்கம்
அதிதி ஷங்கர் நடிப்பு மட்டுமின்றி இந்த படத்தில் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து 'மதுரவீரன்' என தொடங்கும் பாடலையும் பாடியுள்ளார்.
இந்த பாடலை முதன் முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கிராமிய பாடகி ராஜலட்சுமி தான் பாடி இருக்கிறார்.
ஆனால் படக்குழு இறுதியில் ராஜலட்சுமியின் குரலை நீக்கிவிட்டு அதிதியை பாட வைத்திருப்பதாக தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
வாய்ப்பு கொடுத்தது மகிழ்ச்சி
இதுகுறித்து, பாடகி ராஜலட்சுமி தெரிவிக்கையில், “எனக்கு இதில் எந்த வருத்தமும் கிடையாது. அதிதி நன்றாகவே அந்தப் பாடலை பாடியுள்ளார்.
எனது குரல் செட் ஆகாமல் இருந்திருக்கலாம். அதற்காக கூட அதிதியை மாற்றியிருக்கலாம். ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிதி பாடியது நன்றாக இருந்தது.
சரியானவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள் என்பதில் சந்தோசமே” என்று ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.