ஷங்கர் மகளின் செயல்... கடும் ஏமாற்றத்தில் பாடகி ராஜலட்சுமி; எழுந்த புதிய சர்ச்சை
தமிழ் சினிமாவிற்கு வருகை தந்துள்ள இயக்குனர் ஷங்கரின் மகளால் அடிக்கடி புதிய சர்ச்சை எழுந்துள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
முத்தையா இயக்கத்தில், கார்த்தி நடிக்கும் 'விருமன்' படத்தின் மூலம் கதாநாயகியாக திரையுலகிற்குள் அடியெடுத்து வைக்கிறார் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.
இவர், நடிப்பு மட்டுமின்றி இந்த படத்தில் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து 'மதுரவீரன்' என தொடங்கும் பாடலையும் பாடியுள்ளார்.
அதிதி பாடிய பாடல்
இந்த பாடல் ரசிகர்களால் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதிதிக்கு படத்தில் பாடுவது முதல் முறையல்ல, ஏற்கனவே தெலுங்கில் தமன் இசையமைப்பில் ஒரு ரொமான்டிக் பாடலை பாடியுள்ளார் அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.
எழுந்த சர்ச்சை
இந்நிலையில், விருமன் படத்தில் அதிதி பாடிய பாடல் தற்போது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. அதாவது, இந்த பாடலை முதன் முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கிராமிய பாடகி ராஜலட்சுமி தான் பாடி இருக்கிறார்.
ஆனால் படக்குழு இறுதியில் ராஜலட்சுமியின் குரலை நீக்கிவிட்டு அதிதியை பாட வைத்திருப்பதாக தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதனால் நீக்கியது ஏன், இயக்குனர் மகளை பாட வைக்க வேண்டும் என்பதற்காகவா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
மன வருத்ததில் ராஜலட்சுமி
பாடகி ராஜலெட்சுமியும் மிகுந்த மன வருத்ததில் உள்ளாராம். இதுமட்டுமின்றி, அதிதி ஷங்கர் அடுத்த படமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் மாவீரன் படத்தில் கதாநாயகியாக ஜோடி சேர்ந்துள்ளார்.
இதனால் பல நடிகைகள் தங்கள் ஆதங்கத்தை இணையத்தின் மூலம் பதிவிட்டுள்ளனர்.