போக்சோ வழக்கில் இயக்குனர் ஷங்கரின் மருமகன்! கேள்விக்குறியாகியதா மகளின் வாழ்க்கை?
பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் மருமகன் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதால், திருமண வரவேற்பினை நிறுத்தியுள்ள உண்மை தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் ஷங்கர்
இயக்குனர் ஷங்கருக்கு இரு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இவர்களில் மூத்தவர் ஐஸ்வர்யா. இளையவர் அதிதி, இவர்கள் இருவரும் மருத்துவராக உள்ளனர். இதில் அதிதி விருமன் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகியிருக்கிறார்.
இவர்களில் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தொழிலதிபர் தாமோதரன் என்பவரது மகன் ரோஹித்துக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடைப்பெற்றது.
மாம்பழம் சாப்பிட்ட பின்பு இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க! பாரிய பக்கவிளைவு ஏற்படுமாம்
வரவேற்பிற்கு 10 கோடி செலவு
மகளின் திருமண வரவேற்பை மே 1ம் தேதி பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்ட இயக்குனர் ஷங்கர், அதற்காக பத்திரிக்கை அடித்து திரைப்பிரபலங்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கு கொடுத்து வந்தார்.
பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டதாக தான் பத்திரிக்கை கொடுத்தவர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.
இதற்கான காரணம் தெரியாமல் பலரும் தவித்து வந்த நிலையில், தற்போது அதற்கான காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தொடையழகைக் காட்டி லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம்! வாயடைத்துப் போன ரசிகர்கள்
பாலியல் வழக்கில் சிக்கிய மருமகன்
புதுச்சேரி கிரிக்கெட் சங்கத்தின் கீழ் இயங்கி வரும் ஸ்மேஷர்ஸ் கிரிக்கெட் அகாடெமியில் பயிற்சிபெற வந்த 16 வயது சிறுமியின் பிரச்சினையே ஷங்கரின் மகள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கியுள்ளதாம்.
குறித்த சிறுமியிடம் தாமரை கண்ணன் என்ற பயிற்சியாளர் அத்துமீறியுள்ளார். இதனால் சிறுமி நேருக்கு நேர் அவரைக் கேள்வி கேட்டும் கண்டுகொள்ளாத பயிற்சியாளர் தாமரை கண்ணன் மீண்டும் குறித்த சிறுமியிடம் அத்துமீறியுள்ளார்.
இந்நிலையில் மனமுடைந்த சிறுமி புதுச்சேரியின் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித்திடம் முறையிட்டுள்ளார்.
ஆனால் ரோகித் இது பெரிய பிரச்சினை இல்லை என்றும் அட்ஜெஸ் செய்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அதுமட்டுமின்றி ரோஹித்தின் தந்தையும், புதுச்சேரியின் கிரிக்கெட் அசோசியேஷன் முன்னாள் செயலாளருமான தாமோதரன் மிரட்டியுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.