நல்ல மருமகள்.. ஆனாலும் இப்படியா? சூர்யாவுக்கு வந்த அழைப்பு
நடிகை ஜோதிகா வெப் சீரிஸ் ஒன்றில் புகைப்பிடிப்பது போன்று நடித்த காட்சிக்கு விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதற்கு சிவக்குமார் குடும்பத்தினர் என்ன கூறியிருக்கிறார் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் மக்களால் கொண்டாடப்படும் குடும்பம் தான் சிவக்குமார் குடும்பத்தினர்.
அப்பா, மகன்கள், மருமகள் என அனைவரும் சினிமாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள். இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் குடும்ப வாழ்க்கையிலும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
குழந்தைகள் வளர்ந்த பின்னர் சினிமாவுக்குள் என்றிக் கொடுத்த நடிகை ஜோதிகா தற்போது நிறைய படங்களில் கமிட்டாகி நடித்து கொண்டிருக்கிறார்.
அப்படி வெளியான வெப் சீரிஸ் ஒன்றில் புகைப்பிடிப்பது போன்ற காட்சியொன்றில் நடித்திருக்கிறார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
பத்திரிகையாளரின் பேட்டியில் சிக்கிய செய்தி
இந்த நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு மூத்த பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கொடுத்த பேட்டியில், இந்த காட்சிக்கு சிவக்குமார் குடும்பத்தினரின் ரியாக்ஷன் குறித்து பேசியிருக்கிறார்.
அதில்,“கோலமாவு கோகிலா என்ற படத்தை தான் இந்தியில் வெப்சீரிஸ் போன்று எடுத்துள்ளனர். அந்த வெப்சீரிஸில் ஒரு காட்சியில் சிகரெட் பிடித்துக் கொண்டே, லோக்கல் பாஷை, கெட்ட வார்த்தைகள் பேசியிருக்கிறார் ஜோதிகா.
அந்த காட்சியை பார்த்த சிவக்குமார் கோபமாகியுள்ளார். இதுவரையில் கண்ணியத்துடன் தான் குடும்பத்திலுள்ளவர்கள் நடித்து வருகிறார்கள். தனியாக குடித்தனம் போனால் இப்படி மானத்தை வாங்குவீங்களா? பணத்துக்காக இப்படியெல்லாம நடிக்கணுமா? என சூர்யாவுக்கு கோல் செய்து திட்டியதாக கூறப்படுகிறது.
ஜோதிகா மீது சிவக்குமாருக்கு அன்பு இருக்கவே உள்ளது.. "நான் தேடினாலும் இப்படியொரு மருமகள் எனக்கு கிடைக்கமாட்டார்.. என்று என்னிடமே ஒருமுறை சிவக்குமார் சார் சொல்லி உள்ளார்..” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது. அத்துடன் இதற்கு ரசிகர்கள் அவர்கள் பக்கம் இருக்கும் கருத்துக்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |