Pirandai Chutney: மூட்டு வலிக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் பிரண்டை சட்னி!
பிரண்டை எல்லா காலங்கிலும் கிடைக்கக் கூடிய அளப்பரிய மருத்துவ குணங்கள் கொண்ட ஒரு காய்கறியாக அறியப்படுகின்றது.
இதில் உடல் ஆரோக்கியத்துக்கு தேவைாயான பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிரம்பியுள்ளது. பிரண்டையில் அமைரின், அமிரோன், சிட்டோசிரால் மற்றும் வைட்டமின் சி ஆகியவை காணப்படுகின்றன.
இது இரத்த மூலம், வயிற்றுவலி ஜீரணகோளாறுகளை சரி செய்கிறது. மேலும் ஒழுங்காக மாதவிடாய் வராத கோளாறு, ஆஸ்துமா, ஆகியவற்றை தீர்க்கும் வல்லமை வாய்ந்தது இந்த பிரண்டை.
அதனை தினசரி உணவில் சேர்த்துக்கொண்டால், உடல் சுறுசுறுப்பு அதிகரிக்கும், ஞாபக சக்தி பெருகும், மூளை நரம்புகளும் பலப்படும். எலும்பு முறிவு ஏற்பட்டால் உடைந்த எலும்புகள் விரைவாகக் கூடவும் பிரண்டை உதவுகிறது.
பிரண்டை மூட்டு வலி மற்றும் முடக்கு வாதத்துக்கு நிரந்தர தீர்வு கொடுக்கும் அருமருந்தாககும். இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த பிரண்டையில் அசத்தல் சுவையில் சட்னி செய்வது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பிரண்டை-1 கட்டு
சின்ன வெங்காயம்-20
பூண்டு-6பல்
இஞ்சி-1 துண்டு
கடலைப்பருப்பு-2 தே.கரண்டி
உளுத்தம் பருப்பு-3 தே.கரண்டி
வர மிளகாய்-10
புளி-சிறியநெல்லிக்காய் அளவு
நல்லெண்ணெய்-1 குழி கரண்டி
கடுகு /உளுந்து-1 தே.கரண்டி
தாளிக்க
1/4 டீஸ்பூன் பெருங்காயத் தூள்
கருவேப்பிலை- சிறிதளவு
செய்முறை
முதலில் பாத்திரமொன்றில் அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி , உளுந்தம் பருப்பு கடலைப் பருப்பு வரமிளகாய் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தனியாக எடுத்து எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து அதே பாத்திரத்தில் இஞ்சி பூண்டு சின்ன வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் 2 டீஸ்பூன் ஆயில் ஊற்றி பிரண்டையை சேர்த்து மிதமான தீயில் வைத்து நன்றாக வதக்கி ஆறவிட்டு ஒரு மிக்ஸியில் எல்லாவற்றையும் சேர்த்து உப்பு புளி சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இறுதியில் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி, கடுகு உளுந்து பெருங்காயம் தாளித்து அரைத்த சட்னியை சேர்த்து 15 நிமிடம் மிதமான தீயில் கொதிக்கவிட்டு இறக்கினால் பிரண்டை சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |