பராசக்தி படத்தில் சிங்கள நடிகரா? அவரே வெளியிட்ட புகைப்படம்
பராசக்தி திரைப்படத்தில் சிங்கள நடிகர் ஒருவர் நடித்திருப்பதாக புகைப்படங்களுடன் செய்தி வெளியாகியுள்ளது.
பராசக்தி திரைப்படம்
தேசிய விருது பெற்ற படைப்புகளை வழங்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் அடுத்ததாக ”பராசக்தி” எனும் திரைப்படத்தை இயக்குகிறார்.
இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு இசை அசுரன் ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். கடந்த 1965 ஆம் ஆண்டில் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை பின்னணியாகக் கொண்ட இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார்.
இதனை தொடர்ந்து பராசக்தி படத்தின் காட்சிகள் சில இலங்கையில் எடுக்கப்பட்டது. அப்போது இலங்கையில் சினிமா ஆர்வத்துடன் இருக்கும் பல நடிகர்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டன.
ரஞ்சன் ராமநாயக்கா நடிக்கிறாரா?
இந்த நிலையில், இது தொடர்பான பதிவுகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
அந்த வகையில், இலங்கை நடிகரான ரஞ்சன் ராமநாயக்க பராசக்தி படத்தின் நடிப்பது போன்ற புகைப்படங்களை அவருடைய சமூக வலைத்தளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.
அதில், “150 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட திரைப்படம் இலங்கையில் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இயக்குனர் சுதா கோனகராவின் பராசக்தி திரைப்படத்திற்கு இலங்கை ஜனாபதி ஆதரவு கொடுத்து வருகிறார். இது போன்று இன்னும் 10 திரைப்படங்கள் இலங்கையில் படமாக்கப்படவுள்ளது..” என குறிப்பிட்டுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கா Ranjan Ramanayake இலங்கை சினிமாவில் நடிகராகவும், இயக்குநராகவும் இருக்கிறார். அத்துடன் அரசியல்வாதியாகவும் அறியப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |