மேகமா இல்லை ஆடையா? வைரலாகும் நடிகை தமன்னாவின் trendy look!
நடிகை தமன்னா வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட மேகம் போன்ற ஆடையில் ரசிகர்களின் கவனத்தை ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் வகையில் தற்போது வெயிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
நடிகை தமன்னா
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக விளங்கியவர் தமன்னா.கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவர் வில்லியாக அறிமுகமானார். ஆனால் அடுத்தடுத்த படங்களில் அவர் ஹீரோயினாக ஜொலிக்க தொடங்கினார்.
விஜய், அஜித், சூர்யா, ரவி மோகன், தனுஷ், கார்த்தி என பலருடன் ஜோடி போட்டு நடித்த அவர்; கோலிவுட்டில் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்கும் மேலாக டாப்பில் இருந்தார்.
சினிமா துறையில் அறிமுகமாகி குறுகிய காலத்துக்குள் முன்னணி நாயகிகளின் பட்டியலில் இடம்பிடத்த தமன்னா தற்போது தமிழ் சினிமாவை காட்டிலும் பாலிவுட்டில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றார்.
தமிழில் அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்ததுடன் அதில் தமன்னாவின் நடனத்துக்கு தனி ரசிகர் கூட்டமே உருவானது. தமன்னா ஜெயிலர் படத்தில் 'காவாலயா' பாடலுக்கு ஆடிய நடனம் ரசிகர்களை கவர்ந்து வசூலில் சாதனை படைத்தது.
இந்நிலையில் வித்தியாசமான ட்ரெண்டிங் ஆடையில் செம ஹொட் போஸ் கொடுத்து தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |