அடகு வைத்த நகைகளை திருப்ப வேண்டுமா? அப்போ இந்த பரிகாரம் செய்ங்க- பலன் நிச்சயம்
தற்போது இருக்கும் காலக்கட்டத்தில் பலரும் தங்களின் வேலையில் பிஸியாக இருக்கிறார்கள்.
நாளுக்கு நாள் பொருளாதார நெருக்கடிகள் வந்து கொண்டே இருக்கிறது. இதனால் கடன் பிரச்சினைகள் அதிகமாகும் வாய்ப்பு உள்ளது.
அதிலும் குறிப்பாக, நம்மிள் பலர் மிகுந்த கடன் தொல்லையால் தங்களிடம் இருக்கும் நகையை அடமானம் வைத்து விட்டு, அதை திருப்ப முடியாமல் கஷ்டப்படுவார்கள்.
ஏதோவொரு அவசரத்திற்காக ஈட்டு கடைக்கு சென்ற நகைகளை எப்படியாவது திருப்பி விட வேண்டும் என பல முயற்சிகள் செய்தாலும், அது சில சமயங்களில் பலனளிக்காமல் போய் விடும்.
அப்படிப்பட்டவர்கள் அடகு வைத்த நகையை திருப்புவதற்கு வியாழக்கிழமை அன்று சில பரிகாரங்களை செய்யலாம். அப்படியாயின், நகைகளை மீட்க என்ன பரிகாரம் செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
என்ன கிழமை?
தங்க நகைக்கு அதிபதியாக குருபகவான் திகழ்கிறார். குரு பகவானின் அருள் இருப்பவர்களுக்கு நகைகள் அதிகமாக வந்து சேரும். குரு பகவானுக்குரிய நாளாக இருக்கும் வியாழக்கிழமை தங்க நகை தொடர்பான எந்த வேண்டுதலாக இருந்தாலும் செய்யலாம். அப்படி செய்யும் பொழுது முழு பலனை பெற்றுக் கொள்ளலாம்.
பரிகாரம்
குண்டு மஞ்சள், மஞ்சள் நிற துணியை எடுத்து வியாழக்கிழமை அன்று காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் மதியம் 1 மணியிலிருந்து 2 மணிக்குள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் குரு ஹோரை வரும் இந்த மூன்று நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து பரிகாரம் செய்யலாம்.
வீட்டு பூஜை அறையில் மஞ்சள் துணியை விரித்து, அதில் ஒரு துண்டு மஞ்சள் வைத்து கொள்ளவும். அடமானம் வைத்த நகையின் அடகு சீட்டை வைத்து துணியால் மூட்டைக்கட்டி கொள்ளவும்.
அதன் பின்னர், வலது கையில் எடுத்து வைத்து கொண்டு, “ஓம் சொர்ணஸ்ரஜே நமஹ” என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். முழுமனதோடு நிதானமாக கூறலாம். அந்த மஞ்சள் மூட்டையை ஒவ்வொரு வாரமும் எடுத்து முழு மனதுடன் மந்தரம் கூறி பத்திரமாக வைத்துக் கொள்ளவும்.
மூன்று வாரங்களின் பின்னர், ஒரு நல்ல நாளாக பார்த்து மஞ்சளை வெளியில் எடுத்து இடித்து, வெயிலில் காயவைத்து பொடித்து கொள்ளுங்கள். இந்த மஞ்சள் பொடியை பெண்கள் அவர்களுடைய உள்ளங்கால், கை முகம் முழுவதும் பூசி குளிக்க வேண்டும்.
அதே போன்று, வீட்டை துடைக்கும் பொழுதும் இந்த மஞ்சள் தூளை கலந்து துடைக்க வேண்டும். இப்படி செய்வதால் குருவின் அம்சம் உங்கள் வீடுகளுக்கு வந்து சேரும். இதனால் அடமானத்தில் உள்ள நகையையும் உங்களுக்கு கிடைக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).