பிரபுதேவாவின் மகளை பார்த்ததுண்டா? அச்சு அசல் அப்பாவைப் போல் இருக்கும் புகைப்படம்
நடிகர் பிரபுதேவாவின் மகள் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபுதேவா
தமிழ் திரையுலகில் முன்னணி நடன இயக்குனர், நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத் தன்மையைக் கொண்டவர் தான் பிரபுதேவா.
இவர், தனது இரண்டாவது மனைவி மற்றும் மகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார்.
பிரபலமான டான்ஸ் மாஸ்டர் சுந்தரத்தின் மகனான பிரபுதேவா, மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, பிரபு நடித்த அக்னி நட்சத்திரம் படத்தில் வரும் 'ராஜா ராஜாதி ராஜா' என்ற பாடலில் க்ரூப் டான்சராக ஆடி இருந்தார்.
பின்பு அர்ஜுன் நடித்த ஜென்டில்மென் திரைப்படத்தில் சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே என்ற பாடலுக்கு நடனமாடி இந்தியாவின் மைக்கல் ஜாக்சன் என்று ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.
காதல் திருமணம்
பிரபுதேவா அவரது நடன குழுவின் இருந்த ரமலத் என்ற பெண்ணைக் காதலித்து, பெற்றோர்களின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்தார்.
இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்த நிலையில், மூத்த மகன் 13 வயதில் 2008ம் ஆண்டு புற்றுநோயினால் உயிரிழந்தார்.
பின்பு இரண்டு மகன் மற்றும் மனைவியுடன் வாழ்ந்துவந்த பிரபுதேவா, நயன்தாராவைக் காதலிக்க ஆரம்பித்தார். ரமலத்தை ஒருவழியாக விவாகரத்து செய்து பிரிந்த பிரபுதேவா நயன்தாராவை திருமணம் செய்து கொள்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த தருணத்தில் இவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டு பிரிந்தனர்.
இரண்டாவது திருமணம்
பின்பு முதுகுவலியால் அவதிப்பட்டு வந்த பிரபுதேவாவிற்கு பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவர் சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரை காதலிக்க ஆரம்பித்தார்.
இருவரும் தங்களது காதலை குடும்பத்தினரிடம் கூறி சம்மதம் வாங்கியதுடன், திருமணம் செய்தனர். இவர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு பெண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ள நிலையில், தற்போது பெண் குழந்தை பிறந்ததால் பிரபுதேவா உச்சக்கட்ட மகிழ்ச்சியில் காணப்படுகின்றார்.
இந்நிலையில் தனது மனைவி மற்றும் மகளுடன் திருப்பதி கோவிலுக்கு வந்துள்ளார் பிரபுதேவா. அப்பொழுது வெளியான புகைப்படம் தற்போது வைரலாகி வருகின்றது.
இப்புகைப்படத்தில் பிரபுதேவாவின் மகள் அச்சு அசலாக பிரபுதேவாவைப் போன்று இருக்கின்றார். இதனை அவதானித்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |