ராஜகுமாரனை காதலித்தது இதனால் தான் - பல வருடம் கழித்து மனம் திறந்த தேவயானி
நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரனை எதனால் காதலித்து திருமணம் செய்து கொண்டார் என்பதை மனந்திறந்து பேசி உள்ளார்.

நடிகை தேவயானி
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை தேவயானி.
இவர் ரஜினி கமல் அஜித் கமல்ஹாசன் விஜயகாந்த் பார்த்தீபன் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடிபோட்டு நடித்துள்ளார்.

இவர் நடித்த படங்களிலே இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்த படம் என்றால் அது காதல் கோட்டை படம் தான். இவர் இயக்குனர் ராஜகுமாரனை கடந்த 2001 ம் ஆண்டு காதலித்து வீட்டை எதிர்த்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதியினருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
இவர் அழகுக்காக மட்டுமல்ல நடிப்பு திறமைக்காவும் மக்கள் மத்தியில் இன்றுவரை பிரபலமாக உள்ளார். இந்த நிலையில் அடவர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்த காரணத்தை தற்போது மனந்திறந்து கூறி உள்ளார்.

வைரலாகும் பேட்டி
இந்நிலையில் தேவயானி ராஜகுமாரனுக்கு கொடுத்த பேட்டி ஒன்று ட்ரெண்டாகியுள்ளது.
இயக்குநர் ராஜகுமாரன் மீது காதல் வந்தது குறித்து பேசிய தேவயானி "உங்கள் மீது எனக்கு காதல் வந்ததற்கான காரணம் தெரியவில்லை. ஆனால், நீங்கள் எல்லோரிடமும் மரியாதையாக பேசுவீர்கள்.

மரியாதையான ஆள். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதேபோல் உங்களுக்கு குடி, சிகரெட் போன்ற எந்த கெட்ட பழக்கமும் இல்லை. அதுயெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்காது.
அது இல்லாததும் எனக்கு பிடித்திருந்தது இப்படி எனக்கு பிடித்த அத்தனை குணமும் இன்னும் ஏராளமாக உங்களிடம் உள்ளது அதனால் தான் நான் உங்களை காதலித்து இன்று கணவராக்கி உள்ளேன்" என ராஜகுமாரனிடம் கூறுவது போல தேவயானி பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |