திருமணம் செய்யாமல் குழந்தை - பிரபல நடிகையின் பேட்டி படுவைரல்
குழந்தை வேண்டும் என்பதற்காக நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என கூறிய பிரபல நடிகையின் பேச்சு தற்போது வைரலாகி உள்ளது.

நித்யா மேனன்
நடிகை நித்யா மேனன் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து தன்னுடைய நடிப்பு திறமையால் பல ரசிகர்களை ஈர்த்துள்ளார்.
இவர் தமிழ் மட்டுமல்லாமல் கன்னடம், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து பிரபலமானவர். இவர் 8 வயதில் 'ஹனுமான்' என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்றி கொடுத்தார்.

இவருக்கு நடிப்ப திறமை மட்டுமல்ல பாடல் திறமையும் இருக்கிறது. இவர் தற்போது 37 வயதாகினாலும் சிங்கிளாக தான் இருகை்கிறார். இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை.
இந்த நிலையில் அவர் திருமணம் மற்றும் குழந்தை பெங்றுகொள்வது தொடர்பில் அளித்த பேட்டி தற்போது வெளியாகி வருகின்றது.

வைரல் பேட்டி
சமீபத்தில் அளித்த பேட்டியில் நித்யா மேனன் “உங்களுக்குக் குழந்தைகள் வேண்டும் என்பதற்காக மட்டும் நீங்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டிய அவசியமில்லை.
திருமணம் செய்யாமலே குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கென பல அறிவியல் வழிகள் இருக்கிறது.இந்த வழியில் பலரும் தற்போதும் கூட குழந்தை பெற்றெடுத்துக்கொண்டு தான் உள்ளனர். சுதந்திரம் என்பது நமக்கு மிகவும் முக்கியம்.

திருமணம் என்பது வாழ்க்கையின் ஒரு பகுதி மட்டுமே. ஆனால் இது வாழ்க்கை அல்ல. எனக்கு உண்மையான காதல் கிடைத்தால், நான் நிச்சயமாகத் திருமணம் செய்துகொள்வேன்.
ஆனால் எனக்குத் திருமணம் ஆகவில்லை என்பதற்காக வாழ்க்கை நின்றுவிடுவதில்லை” என்று கூறி உள்ளார். இது மக்கள் மத்தியில் படு வைரலாகி வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |