சரத்குமார் வீட்டின் முன் குவிக்கப்பட்ட புத்தகங்கள்! நெகிழ வைத்த சம்பவம்
6000 புத்தகங்களை நன்கொடையாக கொடுத்த சரத்குமாரின் நற்பணி பலரை வியப்படைய வைத்துள்ளது.
சினிமா வாழ்க்கை
தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கியவர் தான் சரத்குமார். இவர் தமிழ் சினிமாவில் பல ஹீட் படங்களை கொடுத்துள்ளார்.
இவரின் நடிப்பு திறமைக்கு “மிஸ்டர் மெட்ராஸ்” என்ற பட்டத்தையும் வென்றார். இதனை தொடர்ந்து நடிகை ராதிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கிறார். இவர் இன்று வரை பல வெற்றி படங்களை முக்கிய கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார்.
இவர் சினிமா மட்டுமல்ல சமூக பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
புத்தகங்கள் நன்கொடை
இந்த நிலையில், தன்னுடைய அப்பா முதற் கொண்டு மற்றவர்கள் பரிசாக கொடுத்த சுமார் 6000 புத்தகங்களை வீட்டு வாசலில் வைத்து தேவைப்படுபவர்களுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அந்த புத்தகங்களில் சரத்குமாரின் கையெழுத்தும் இருக்கிறது.
மேலும் ஸ்மார்ட் போன்கள் சூழ்ந்துள்ள இந்த காலப்பகுதியில் புத்தக வாசிப்பை மேன்படுத்துவதாக இந்த செயற்பாடு அமைந்துள்ளது.
மேலும் புத்தகங்களை பொக்கிஷமாக வைத்திருப்பதை விட அதனை பகிர்ந்து கொடுப்பது தான் சந்தோசம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், சரத்குமாரின் இந்த செயலுக்கு பலரும் வாழ்த்துக்களை பகிர்ந்து கொடுத்து வருகிறார்கள்.