இன்றைய குழந்தைகளுக்கு நல்ல புத்தகம் வாங்குவது எப்படி?
இன்றைய காலக்கட்டத்தில் குழந்தைகளை ஆரம்பத்தில் இருந்தே நல்லதை கற்றுக்கொடுக்க வேண்டும். அதிலும் புத்தகத்தின் மீது உள்ள ஆர்வத்தையும் தூண்ட வேண்டும்.
அப்போது தான் அவர்கள் அதனை விரும்பி நிறைய கற்றுக்கொள்வார்கள். குழந்தைகளுக்காக புத்தகத்தை வாங்கும் போது, அதனை சரியானதாக தேர்ந்தெடுக்க வேண்டும்.
இந்த கால குழந்தைகள் வேறு ரகம். அவர்களே அவர்களுக்கு பிடித்ததை தேர்வு செய்து கொள்வார்கள். உங்கள் குழந்தைகள் வீட்டில் ஏதோ ஒன்றை சிறப்பாக செய்தவுடன் அவர்களை பாராட்டும் தொனியில் ஒரு நல்ல கதை புத்தகம் வாங்கி தருவதாக உறுதியளியுங்கள்.
எப்படி வாங்கலாம்?
அப்போது அவர்களிடம் என்ன கதை புத்தகம் வேண்டும் என்றும் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அடுத்த நாள் காலையில் நீங்கள் அலுவலம் செல்லும் போது இன்று மாலை புத்தகம் வாங்கி வருகிறேன் என்று கூறி ஆர்வத்தை தூண்டுங்கள்.
மேலும், ஆனால் புத்தகம் வாங்கி வருவதும், வாங்கி வராமல் மேலும் ஆர்வத்தை தூண்டுவதும் உங்கள் விருப்பம். ஒரு குழந்தைக்கு ஒரு புத்தகம் வாங்குவதே போதுமானது. பல புத்தகங்கள் வாங்கினால் அவர்கள் இக்கரைக்கு அக்கரை பச்சை என்று அடுத்த புத்தகம் நோக்கி தாவி விடுவார்கள்.
பிடித்ததை வாங்கி கொடுங்கள்
நீச்சல், ஓவியம், சிலம்பம், ஸ்கேட்டிங் என... குழந்தைகளின் தனித்திறமைகளை வளர்ப்பது நல்லதுதான் என்றாலும், அவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்.
3-8 வயது குழந்தைகளுக்கு படக்கதை புத்தகமே சிறந்தது. அடுத்து, 10 வயது தாண்டிய குழந்தைகளுக்கு அறிவு சார்ந்த புத்தகங்களை வாங்கி கொடுக்கலாம்.
நகைச்சுவை, புராணம், சரித்திரம், ஆன்மிகம் மற்றும் வாழ்க்கை வரலாறு போன்ற புத்தகங்களை இவர்கள் விரும்பி படிப்பார்கள்.
18 வயது கடந்த குழந்தைகளுக்கு வாழ்க்கையின் ரகசியம். வெற்றியின் பாதை போன்ற தன்னம்பிக்கை உடைய புத்தகங்களை வாங்கி கொடுங்கள்.
அடுத்து, பஞ்ச தந்திர கதைகள், நீதிக்கதைகள் போன்ற புத்தகங்களையும் வாங்கிக் கொடுக்கலாம். எளிய சம்பவங்களின் மூலம், குழந்தைகளின் மனதில், நீதியை பதிய வைக்கும் நோக்கங்களுடன் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளதால், அவர்கள் மனதில் எளிதில் பதியும்.