விராட் கோலியின் கையெழுத்து போட்ட ஜெர்சி மட்டுமே இத்தனை லட்சமா? ஏலத்தில் விடும் நிறிவனம்!
இந்திய அணியின் ரன் மெஷின் நட்சத்திர வீரரான விராட் கோலி கிரிக்கெட் உலகில் சச்சினுக்கு பிறகு பல சாதனைகளை படைத்து இருக்கிறார்.
ஆனால், கொரோனாவுக்கு பிறகு கடந்த இரண்டு ஆண்டுகளாக அவரது பார்ம் இல்லாமல் பேட்டிங்கில் சதம் அடிக்க திணறி வருகிறார். கடைசியாக அவர் சதம் விளாசி இரண்டரை ஆண்டுகள் ஆகிறது.
எனினும் அவருடைய மவசு குறையவில்லை. ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணிக்காக விளையாடும் கோலி, இம்முறை ரன்கள் பட்டாசு போல் கொளுத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மும்பைக்கு எதிரான ஒரே போட்டியில் மட்டும் 48 ரன்களை விளாசி அவுட் ஆகியிருந்தார். இருப்பினும் விராட் கோலி மீது ரசிகர்கள் அவ்வளவு நம்பிக்கை வைத்துள்ளனர்.
அவர் மீண்டும் பழைய மாறி ரன் வேட்டையை தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். இந்நிலையில், விஸ்டன் நிறுவனம், தனது இணையத் தளத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதில், விராட் கோலி கையெழுத்திட்ட இந்திய அணியின் ஜெர்சி விற்பனைக்கு வந்துள்ளது. அந்த ஜெர்சியின் விலை மட்டுமே ஒரு லட்சத்து 91 ஆயிரத்து 376 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஜெர்சியை பிரேம் செய்து, விராட் கோலியின் புகைப்படங்களுடன் விஸ்டன் வழங்க உள்ளது.
இந்த ஒரு ஜெர்சி மட்டும் தான் விற்பனைக்கு வர உள்ளதால் இதனை வாங்க கடும் போட்டி நிலவும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.