பார்க்கவே பரிதாபமாக மாறிப்போன அப்பாஸை நினைவிருக்கிறதா? இப்போ என்ன பண்றாருன்னு தெரியுமா
காதல் தேசம் திரைப்படம் மூலம் அறிமுகமாக நடிகர் அப்பாஸின் தற்போதைய புகைப்படம் ஒன்று அனைத்து சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி வருகின்றது.
நடிகர் அப்பாஸ்
கொல்கத்தாவைச் சேர்த்த அப்பாஸ் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டவர், இவரை முதன் முதலாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் கதிர்.
முதல் படமான காதல் தேசம் திரைப்படத்தில் பார்ப்போரை கவர்ந்திழுக்கும் ஒரு தோற்றம் கொண்டிருந்த இவர் முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் படமாக மாறியது.
இவரின் அழகிற்கே தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல படவாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. இவருக்கு சுத்தமாக தமிழே தெரியாது ஆனாலும் படைப்பா, ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், மின்னலே, கண்டு கொண்டேன் கண்டுகோண்டேன் போன்ற பல ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார்.
சினிமாவில் படவாய்ப்புகள் குறைய பிஸ்னஸில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின்னர் திருமணம் முடித்து குடும்பத்தோடு வெளிநாட்டில் செட்டிலானார்.
தற்போதைய நிலைமை
இந்நிலையில் இவருக்கு கடந்த வருடம் காலில் ஒரு அறுவைச் சிகிச்சை நடைப்பெற்றிருந்தது.
இவர் பேட்டியொன்றில் தான் தற்போது நியூஸிலாந்தில் பெட்ரோல் பங்க் , பாத்ரூம் கிளீனர் போன்ற வேலைகளைப் பார்த்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், பைக் மெக்கானிக் வேலை செய்து தான் குடும்பத்தை நடத்தி வருவதாகவும் தெரிவித்திருந்தார். இவரின் அந்தப் புகைப்படம் ஒன்றும் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகின்றது.
இவரின் நிலைமைக் கண்டு பலரும் வேதனையடைந்து வருகின்றனர்.