நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில்...லீக்கான அதிர்ச்சி புகைப்படத்தால் பதறும் ரசிகர்கள்
நடிகர் அப்பாஸ் அறுவை சிகிச்சைக்காக திடீரென்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூகவலைத்தள பக்கத்தில் நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் புகைப்படத்தினையும் பகிர்ந்துள்ளார்.
நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில்
மேலும், கவலைகள் மிக மோசமானவையாக இருக்கும்.
ஆனால் நான், சில பயங்களை சமாளிக்க முயற்சிக்கிறேன். அறுவை சிகிச்சை முடிந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும். உங்கள் பிரார்த்தனைகளுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அப்பாஸிற்கு என்ன ஆச்சி என்று பதறி போயுள்ளனர்.
அப்பாஸிற்கு என்ன ஆச்சி
இதேவேளை, என்ன அறுவை சிகிச்சைக்காக நடிகர் அப்பாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற எந்த தகவலையும் வெளியிட வில்லை.
மிக விரைவில் முழுமையாக குணமடைந்து வீடு திரும்ப பலரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.