கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸின் மகளை பார்த்துள்ளீர்களா? 21 வயதில் ஜொலிக்கும் புகைப்படம்!
நடிகர் அப்பாஸ் தமிழில் காதல் தேசம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். இதையடுத்து, பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா, ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் உட்பட பல படங்களில் நடித்தார்.
சினிமாவின் சாக்லேட் பாய் என்ற இமேஜ் இவருக்கு பல வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது, அவர் நடிப்பில் வெளிவந்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, வி.ஐ.பி போன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது என்றே கூறலாம்.
திருட்டுப் பயலே என்ற படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அப்பாஸ்க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த நிலையில், தற்போது வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார்.
தனது மனைவி எரம் அலி, ஒரு மகன், மகளுடன் தற்போது வெளிநாட்டில் வசித்து வருகிறார். இதனிடையே அப்பாஸ், 21 வயது மகள் எமிராவின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இவர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அடுத்த நடிகை தயாராகி விட்டார் என்று விமர்சனங்களை செய்து வருகின்றனர்.