நடிகர் அப்பாஸ் இப்போது என்ன செய்கிறார்? அடையாளம் தெரியாமல் மாறிய அதிர்ச்சி... லீக்கான புகைப்படம்
பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த அப்பாஸின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.
1996-ம் ஆண்டு கதிர் இயக்கத்தில் வெளியான 'காதல் தேசம்' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் அப்பாஸ்.
ஒரு கட்டத்தில் இவருக்குப் போதிய வாய்ப்புகள் வரவில்லை. அதன் பின்னர் திருமணம் செய்து கொண்டு குடும்பத்தினருடன் நியூசிலாந்தில் செட்டிலாகி விட்டார்.
அவருடைய மனைவி அங்கு முன்னணி ஆடை வடிவமைப்பாளராகப் பணிபுரிந்து வருகிறார். அப்பாஸும் முன்னணி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துக்குப் பணிபுரிந்து வருகிறார்.
மகன் ஏமான் மற்றும் மகள் எமிரா இருவரும் அங்கு படித்து வருகிறார்கள். இந்த நிலையில் அவரின் அண்மைய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு வியப்பினை ஏற்படுத்தியுள்ளது.