சோம்பேறி ரெசிபி: 2 முட்டயும் ஒரு கப் சாதமும் இருக்கா? அப்போ இந்த ரெசிபி செய்ங்க
சமைக்க சோம்பேறியாக இருக்கும் நாட்களில் கூட, ருசிகரமான உணவை விரைவில் தயார் செய்யலாம். எக் பெப்பர் ரைஸ் சிறந்த தேர்வு. வெறும் 5 நிமிடங்களில் செய்யக்கூடிய இது, சுவையால் அனைவரையும் கவரும்.
பேச்சுலர்களுக்கும் காலை அவசர நேரம் உள்ளவர்களுக்கும் இது பக்கா லஞ்ச் ஐடியாவாக இருக்கும். இந்த ரெசிபி செய்வதற்கு 2 முட்டை மற்றும் சாதம் இருந்தால் போதும். மிகவும் எளிமையாக செய்து விடலாம். இது எப்படி செய்யலாம் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- எண்ணெய்
- வெங்காயம்
- பீன்ஸ்
- கேரட்
- பச்சை மிளகாய்
- இஞ்சி பூண்டு பேஸ்ட்
- உப்பு மிளகுத்தூள்
- கரம் மசாலா
- முட்டை - 2 வடித்த சாதம்
- கொத்தமல்லி
செய்முறை
ஒரு கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, அது நன்றாக மங்கலான நிறமாகும் வரை வதக்கவும். வெங்காயம் வதங்கியதும், அதில் நறுக்கிய பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை மிளகாய்கள் சேர்க்கவும்.
2–3 நிமிடங்கள் மிதமான தீயில் கிளறி வதக்கவும்.இப்போது 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து, அதன் பச்சை வாசனை போய்விடும் வரை வதக்கவும்.
இது சுமார் 1 நிமிடம் ஆகும். பிறகு தேவையான உப்பு, 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் மற்றும் 1/4 டீஸ்பூன் கரம் மசாலாவை சேர்க்கவும். கிளறி, மசாலா நன்கு கலந்து வாசனை வரும் வரை வதக்கவும்.
இப்போது 2 முட்டைகளை உடைத்து நேரடியாக கடாயில் ஊற்றவும். உடனே கிளறத் தொடங்கி, முட்டை சுமார் 80% வரை வேகும் வரை வதக்க வேண்டும். முட்டை அதிகமாக வறுக்க வேண்டாம் — சாஃப்ட் இருக்கட்டும்.
முட்டை சமைந்ததும், அதில் வடிகட்டிய வெந்த சாதத்தை (cool செய்யப்பட்ட சாதம் சிறந்தது) சேர்க்கவும். சாதமும் மசாலாவும் நன்கு கலக்கும் வரை மெதுவாக கிளறவும். 1–2 நிமிடங்கள் சுட வைத்து கலக்கவும்.கடைசியாக, நறுக்கிய கொத்தமல்லி தூவி, இறக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |