ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர் அப்பாஸ்.. நடிப்பை விட்டு விலக காரணம் என்ன தெரியுமா?
நடிகர் அப்பாஸ் தமிழில் காதல் தேசம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர். அதையடுத்து பிரபுதேவாவுடன் விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, ஜாலி, பூவேலி, ரஜினிகாந்துடன் படையப்பா,. ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், கமல்ஹாசனின் பம்மல் கே சம்மந்தம் உட்பட பல படங்களில் நடித்தார்.
கடைசியாக, ராமானுஜம் என்ற படத்தில் சின்ன கேரக்டரில் நடித்திருந்தார். இதன் பின்னர் அதிகமான பெண் ரசிகர்கள் கொண்ட அப்பாஸ், தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி, தெலுங்கு பட வாய்ப்புகளும் அவரைத் தேடி வந்தன. இதையடுத்து, ஆயிரத்தில் ஒருவன், குரு என் ஆளு உட்பட பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றிய எரும் அலி, ஃபேஷன் டிசைனரை திருமணம் செய்துகொண்டார்.
இவர்களுக்கு எமிரா, அய்மான் என இரு குழந்தைகள் உள்ளன. இதையடுத்து அவர் தனது குடும்பத்துடன் நியூசிலாந்து சென்றார்.
அங்கு ஆக்லாந்து நகரில் செட்டில் ஆகிவிட்டார்.
இந்நிலையில், சமீபத்தில் பேட்டியளித்த அவர்,. அப்போது ஏன் சினிமாவில் நடிப்பதை நிறுத்தி விட்டீர்கள்? என்ற கேள்விக்கு, தன்னையும் வியக்க வைக்கும் அளவுக்கு எந்த கதையும் வரவில்லை எனவும்,.
நாளுக்கு நாள் நடிப்பு மிகவும் போர் அடித்து விட்டதால் சினிமாவை விட்டு விலகி தற்போது தன்னுடைய குடும்பத்துடன் நல்லபடியாக இருக்கிறேன் எனவும் கூறியுள்ளார்..