நீரிழிவு நோயாளிகளுக்கு பழங்கள் மட்டுமல்ல இலைகளும் காப்பாற்றும்... எப்படித் தெரியுமா?
தற்போது வயது வித்தியாசம் பார்க்காமல் தாக்கும் நோய் தான் இந்த நீரிழிவு. நீரிழிவு வந்து விட்டாலே சிலருக்கு உணவு மீதான அச்சம் அதிகரித்து விடும்.
சிலருக்கும் அக்கறை அதிகரித்து விடும். அதற்காக உணவுக் கட்டுப்பாடுகளை நினைத்துப் பலரும் அலறுவார்கள். உணவு கட்டுப்பாடு என்ற பெயரில் சிலர் எதனையும் சரிவ சாப்பிடமாட்டார்கள்.
நீரிழிவு நோயாளிகளைப் பொறுத்தவரை எப்போதும் அனைத்து சத்துகளும் நிறைந்த உணவையே உண்ண வேண்டும். அப்படி இந்நோயாளிகள் பழங்கள், தானியங்கள், உணவுகள் எல்லாவற்றிலும் இதை தான் சாப்பிடவேண்டும் என்று ஒரு கட்டுப்பாடும் வரையறையும் இருக்கும்.
அது போல நீரிழிவு நோயாளிகளுக்கு சில இலைகளும் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? அவை என்னென்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
கற்றாழை இலை
கற்றாழையில் இருக்கும் நன்மைகள் பற்றி நாம் எல்லாரும் நிச்சயமாக அறிந்திருப்போம். அந்தவகையில் கற்றாழை இலை நீரிழிவு நோயாளிகளுக்கு பயனுள்ளதா என்று ஆய்வு ஒன்று மேற்கொண்டதில் கற்றாழை ரத்தத்தில் உள்ள சர்க்கரையை குறைக்கும் தன்மை கொண்டது. கற்றாழை இலைகளை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், இன்சுலின் உற்பத்தி அதிகரித்து, ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
சீத்தாப்பழ இலை
இலைகளில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், பொட்டாசியம், தாதுக்கள், கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இப்படி பல நன்மைகளைக் கொண்ட சீத்தாப்பழ இலையும் நீரிழிவு நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருக்கிறது. இந்த இலைகள் உடலில் உள்ள நீரிழிவை கரைத்து, சீரான அளவில் வைத்து கட்டுக்குள் வைக்கிறது.
வேப்பிலை
வேப்பிலையானது ஏராளமான நன்மைகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் கிருமிகளை அழிக்கு ஒரு கிருமி நாசினியாகவும் இருக்கிறது. இந்த வேப்பிலையை அதிகாலையில் வேப்பிலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் கணையம் தன் வேலையைச் சரியாகச் செய்யும். இதனால் இன்சுலின் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |